‛சிம்புவை 16 வருடமாய் என் தங்கை காதலிக்கிறாள்...’ பற்ற வைத்த பிரபல சீரியல் நடிகை!

சிம்பு பல சிக்கல்களில் சிக்கி சின்னபின்னமாகி, தனது சினிமா கேரியரில் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அதற்குள், அவரின் காதல் குறித்து சீரியல் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

Continues below advertisement

சிம்புவின்  ‘மாநாடு’ திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல கட்ட போராட்டகளுக்கு பிறகு படம் ரிலீஸ் செய்யப்பட்டு, படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்று ரசிகர்களின் வாழ்த்து மழையில் படக்குழுவினர் நெனைந்து வருகின்றனர்.

Continues below advertisement

சிம்பு பல சிக்கல்களில் சிக்கி சின்னபின்னமாகி, தனது சினிமா கேரியரில் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அதற்குள், அவரின் காதல் குறித்து சீரியல் நடிகை ஒருவர் கூறியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய் டிவியில்  பிரபலமான சீரியலான சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் பிரபலமானவர் சாய் காயத்ரி. இவர், தற்போது  சிம்புவின் காதல் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்தப்பேட்டியில், அவரது தங்கை சிம்புவை காதலிப்பதாக கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க: Maanaadu Twitter Review: இது புரிஞ்சுக்குற டைம் லூப்.. எப்படி இருக்கு மாநாடு.. ட்விட்டர் ரிவ்யூ கலகலப்பு!


பள்ளியில் படிக்கும்போது சிம்பு மீது காதல் வயப்பட்டு இருந்ததாகவும். சன் மியூசிக் சேனலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, சிம்புவின் பாட்டு வரும்போதெல்லாம், அவர் மீது தங்கைக்கு கிரஷ் ஏற்பட்டதாகவும்,  16 வருடங்களாக சிம்பு காதலித்து வருவதாகவும், சிம்புவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், முதலில் அவரிடம் தனது காதலை தங்கை கூறுவார் என்றும் பேட்டியில் கூறியுள்ளார். தங்கையும் ஒரு சீரியல் நடிகை ஆவாராம். இந்தப்பேட்டி, சில தினங்களுக்கு முன்பு வெளியானாலும், மாநாடு வெற்றிக்கு பிறகு மீண்டும் பேட்டியை வைரலாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். பிரேம்ஜியை கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன்! என்னப்பா இவ்ளோ கோவம் என வைரலாகும் ட்வீட்!

 சாய் காயத்ரி 1992 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.  மதுரையில் உள்ள செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார்.

டிவி தொகுப்பாளினியாக ஜெயா டிவி, ஜீ தமிழ் மற்றும் ராஜ் டிவி உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றினார். இவர் விஜய் டிவியில் கானா காணும் கலங்கள் கல்லூரியின் கதை என்ற தமிழ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே,  சிவா மனசுல சக்தி உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட தமிழ் சீரியல்களிலும் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola