பிரபல டிவி சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் தனது வருங்கால கணவர் குறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு  சன் டிவியில் சரிகம நிறுவனம் தயாரிப்பில் சந்திரலேகா சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் சந்திரா கேரக்டரில் நடித்த ஸ்வேதாவும், லேகா கேரக்டரில் நடித்த நாகஸ்ரீயும் முதல் எபிசோடில் இருந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த சீரியலில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்தனர்.  2000 எபிசோட்களை கடந்த பெருமையோடு இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இதில் சின்னத்திரை ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு ஸ்வேதாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் நடித்த ஸ்வேதா ஆழ்வார், வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, பயணங்கள் தொடரும், நான் தான் பாலா, பூலோகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

பொறியியல் பட்டதாரியான இவர், தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில் நீண்ட காலமாக என் இதயத்தை காணவில்லை. கடவுளுக்கு நன்றி! இறுதியாகநான் இப்போது கண்டுபிடித்தேன்...! என தெரிவித்துள்ளார். ஆனால் அதில் அவரது  கணவரின் திரும்பி நிற்பதால் அது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் தங்கள் அபிமான சந்திராவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.