‛கட்டப் பை காட்சி’ லெஜண்ட் சரவணனை கலாய்த்த பிரபல சீரியல் நடிகை!

திரை உலகில் இருந்து முதல் குரலாக, சீரியல் நடிகை ஒருவர் லெஜண்டை கலாய்த்து இருப்பது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

பிரபல டிவி தொகுப்பாளராக இருந்து, தற்போது, முன்னணி டிவி சீரியல் நடிகையாக இருப்பவர் சரண்யா. விஜய் டிவியில் இவர் நடித்து ஒளிபரப்பாகும் சீரியல்கள் பலரின் விருப்பமாக உள்ளது. எளிமையாகவும், அருமையாகவும் பழகக்கூடியவர் சரண்யா. அதே நேரத்தில், அவரது முந்தைய ஊடக அனுபவத்தை வைத்து, அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிடுவார். 

Continues below advertisement


அந்த வகையில் நேற்று உலகமெங்கும் வெளியான லெஜண்ட் சரவணன் நடித்த, தி லெஜண்ட் படம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். இருந்தாலும் சினிமா பிரபலங்கள் பலரும், தி லெஜண்ட் படத்தை பாராட்டியும், சரவணனை புகழ்ந்தும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் தான், சரண்யா தனது முகநூலில் ஒரு பரபரப்பான பதிவை பதிவு செய்துள்ளார். அதில், அவர் லெஜண்ட் படத்தை பங்கமாய் கலாய்த்து ஒரு போஸ்ட் பதிவு செய்துள்ளார். லெஜண்ட் படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்து அத்துடன், 

‛‛முதல் நாள் காட்சி.. லெஜண்ட் காக
லெஜண்ட் கடையில் வாங்குன எக்ஸட்ரா கட்டப்பைக்காக….’’
 
என்று டெக்ஸ்ட் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே கட்டப்பையை வைத்து லெஜண்ட் படத்தை பலரும் கலாய்த்துக் கொண்டிருக்கும் வேளையில், பிரபல முன்னணி சீரியல் நடிகை சரண்யா, நேரடியாகவே லெஜண்ட் கடையில் வாங்கிய எக்ஸ்ட்ரா கட்டப்பைக்காக முதல்நாள் கட்சி என்று பதிவிட்டுள்ளது, அவரது ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. 
 
கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் லெஜண்ட் படம், 800 திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில் பேசப்படும் படமாகவும், அதிக விமர்சனங்களை சந்திக்கும் படமாகவும் மாறியுள்ளது. தியேட்டரை நோக்கி பலரும் வந்ததால் தான், பாராட்டும், விமர்சனமும் ஒரே நேரத்தில் வெளியாகி வருகிறது. 
இந்நிலையில் திரை உலகில் இருந்து முதல் குரலாக, சீரியல் நடிகை ஒருவர் லெஜண்டை கலாய்த்து இருப்பது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola