பயணம் என்றால் யாருக்குத்தான் புடிக்காது. மழை நாட்களில் பயணங்கள் என்றாலே கூடுதல் மகிழ்ச்சிதானே. மண் வாசனை, இயற்கையான சூழல், வெயில் கவலை இல்லை -இப்படி நிறைய இருக்கும். ஆனால், மழை நாட்களில்  சுற்றுலா பயண திட்டமிடல் சற்று சவாலானதுதான். கவலை வேண்டாம். மழை காலத்தில் சுற்றுலா செல்ல என்னென்ன திட்டமிடல் செய்யனும்னு இக்கட்டுரையில் காணலாம்.


மழை துளிகளின் ஓசைகளிலேயே கடல் கடந்து, மலை தாண்டி புதிய பகுதியில் உள்ளவற்றை காணுவது மிகவும் அழகானது. மழை காலம் என்பதால் உடல்நலக் குறைவு ஏற்படுவது சாதரணமானது. அதற்கேற்றவாறு திட்டமிடுதல் நல்லது.










சுற்றுலா தலம்:


இந்த மழை நாட்களில் ரோட் டிரிப் செல்ல நினைத்தால், அதற்கேற்றவாறு பாதுகாப்பான சாலை பயணத்தைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் பயணம் செல்லும் நாட்களுக்கு முன்னதாகவே, வழிகளை நன்கு தெரிந்துகொள்ளுங்கள். இரவுகளில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது. மலைப் பகுதிகளுக்கு மழை நாட்களில் செல்ல வேண்டாம். ஏனெனில், மழையினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகம். நீங்கள் எந்த ஊருக்கு செல்ல இருக்கிறீர்களோ அதை பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து அந்த இடங்களைப் பற்றி தெரிந்துகொண்டு செல்லுங்கள்.


உடைகள்:


நான் இரண்டு நாள் மட்டும்தான் ஊருக்கு போறேன்னு, கரெக்டா இரண்டு மூன்று உடைகளை மட்டும் எடுத்து வைத்து கொள்ளும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். எப்போதும், திட்டமிட்ட நாட்களுக்கு தேவையானதைவிட கூடுதலாக இரண்ட் செட் உடைகளை எடுத்து செல்வது நல்லது.  லைட் வெயிட் ஆடைகள் என்றால் இன்னும் சிறப்பு.



 













உங்கள் பொருட்களை வைத்துக்கொள்ள மழையில் நனைந்தாகும் ஈரம் உள்ளே புகாத வாட்டர் புரூப் பைகளை எடுத்துசெல்வது நல்லது. கேமரா வைத்திருந்தால், நிச்சயம் வாட்டர் புரூப் பேக்தான் சிறந்த தேர்வு. நீங்கள் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கு வாட்டர் புரூப் பைகள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.




முதலுதவி பெட்டி:


சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பலவற்றிற்கும் தேவையான மருந்துகளுடன் முதலுதவி பெட்டி அவசியம் உங்களுடன் இருக்க வேண்டும்.  கொசு கடியில் இருந்து தப்பிக்க எண்ணெய், தெர்மோமீட்டர், சானிடைஸர், மாஸ்க், பேன்டேஜ், காட்டன், உள்ளிட்டவைகளுடன் கூடிய முதலுதவி பெட்டி பயணத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.


மழை காலம் என்பதால்:


மழை காலம் என்பதால் ரெயின் கோர்ட், குடை உள்ளிட்டவற்றையும் எடுத்துகோங்க. கெட்டில், குளிர் தாங்கும் அளவிற்கு ஜெர்கின், ஸ்வெட்டர், போர்வைகள் ஆகியவற்றை உடன் கொண்டு செல்லுங்கள்.