ரன்பீர் கபூர், சஞ்சய் தத், வானி கபூர் உள்ளிட்ட முன்னனி பாலிவுட் நடிகர்கள் பலர் நடித்துள்ள ஷம்ஷேரா திரைப்படம் கடந்த 22ம்தேதி வெளியாகியது. இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.
‘ஷம்ஷேரா’ திரைப்பபடம்
1800 கால கட்டத்தில் குறிப்பிட்ட வகையான பழங்குடியின மக்கள் ஆங்கிலேய அரசுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். அப்படி சிக்கியிருக்கும் மக்களை கதாநாயகன் எப்படி மீட்கிறான் என்பதே கதை. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது. வழக்கமாக ‘சாக்லேட் பாய்-ரெமான்டிக் ஹீரோ’ கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ரன்பீர், இப்படத்தில் ஒரு புரட்சியாளராக புதுவிதமாய் தோற்றமளித்ததால் இப்படத்திற்கான எதிர்பார்பு மேலும் மேலும் எகிரிக்கொண்டே போனது. முன்னதாக இந்தியத் திரையுலகில் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்களான RRR, பாகுபலி போன்று ஷம்ஷேராவும் சுமார் 150 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இப்படத்திற்கான ‘ப்ரமோஷன்’ வேலைகளை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மாறி மாறி, நடிகர் ரன்பீர் கபூர் மேற்கொண்டு வந்தார்.
படம் தோல்வி!
ஷம்ஷேராவின் ‘ஒன் லைன்’ ஸ்டோரி நன்றாக இருந்ததால் இப்படத்தின் ரிலீஸ் டேட்டிற்காக திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் தமிழ் உள்பட மும்மொழிகளிலும் இப்படம் வெளியானது. பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் முதல் நாளிலேயே விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. மேலும், பல கோடி ரூபாய் பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் பல லட்ச ரூபாய் செலவில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை வெறும் 36 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியைத் தழுவியுள்ளது. படத்தின் ட்ரெயிலர் மற்றும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தை பற்றி மாஸ் காட்டிய அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லைேயே என ரசிகர்கள் பெறுத்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால், மொத்த படக்குழுவே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தது. இதனால்,ஷம்ஷேரா படத்தின் இயக்குநர் கரன் ரவி மல்ஹோத்ரா மற்றும் அப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகளையும் நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர். இது குறித்து படக்குழுவும் எதுவும் வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
இயக்குனரின் பதிவு…
ஷம்ஷேரா படம் குறித்து ரசிகர்கள் அனைவரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அப்படத்தின் இயக்குனர் கரன் ரவி மல்ஹோத்ரா ஒரு பதிவை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவுது, “இந்த திரையுலக மேடையில் என்னை யார் என்று வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் முக்கியம், ஏனென்றால் இங்கே அன்பு, வெறுப்பு, கொண்டாட்டம் மற்றும் அவமானம் என எல்லாமே இருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் எதிர்கொண்ட வெறுப்பை சமாளிக்க முடியாமல் உங்களை கைவிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அப்படி நான் விலகியது எனது பலவீனம். அதற்காக வேறு எந்த காரணமும் கூற முடியாது. இனி வரும் காலங்களில் அனைத்தையும் அனைவரும் சேர்ந்தே எதிர்கொள்வோம். இதில் என்னுடன் துணைநின்ற ஷம்ஷேரா படத்தின் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கும் பெரிய நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.