பிரபல ரவுடியாக அறியப்படுபவர் மதுரை வரிச்சியூர் செல்வம். கொத்து கொத்தாக நகை அணிவது ஏன் என, இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதோ அந்த பேட்டி...


 




சுறா படப்பிடிப்பு முடித்துவிட்டு, விஜய் ஏர்போட்டில் இருந்தார். அப்போது, என்னிடம் தகவலை கூறினார்கள் சரி, அவரை பார்க்கலாம் என நானும் அருகில் சென்றேன். இன்னோவா காரில் அமர்ந்து கொண்டு ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தார் விஜய். நான் இப்போது இருப்பதை விட, இன்னும் பயங்கர தோற்றத்தில் இருப்பேன், முடியெல்லாம் விரித்து போட்டபடி ஒரு மாதிரி இருப்பேன். 


கார் முன்னோடி போய் நின்று, ‛என்னங்க விஜய் நல்லா இருக்கீங்களா...’ என்று கேட்டேன். அவருக்கு என்னை பார்த்ததும் பதட்டமாகிவிட்டது. ‛யார்ர இவன், கழுத்து நிறைய செயின் போட்ட்டு வந்து நிற்கிறான்னு’ அவருக்கு ஒரே அதிர்ச்சி. 


‛என்ன விஜய் சார் நல்லா இருக்கீங்களா... நல்லா நடிக்கிறீங்க விஜய் சார்... ஆனால், வில்லன்களை ரொம்ப அடிக்கிறீங்க... பத்து பதினஞ்சு பேரை அடிக்கிறீங்க... அது எனக்கு பிடிக்கல. அதை மட்டும் குறைச்சுக்கோங்க,’ என்று அவரிடம் கூறினேன். அவருக்கு ஒரே சிரிப்பாகி விட்டது. 


இன்னொரு விசயம் சொல்றேன். மு.க.அழகிரி மகன் திருமணத்தன்று விமானத்தில் சென்றேன். அன்று ரஜினிகாந்த மற்றும் அவரது மனைவி, தனுஷ். தனுஷ் மனைவி, ஒய்ஜி மகேந்திரன், அவரது மனைவி ஆகியோர் என்னுடன் பயணித்தனர். நாங்க 15 பேர் ஒரு பஸ்ஸில் பயணித்தோம். 






என்னுடம் சிங்கராஜ் என்ற வழக்கறிஞர் வந்தார். அவர் எங்கள் அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். அவர் ரஜினி சார் ரசிகர். பாபா படம் வந்த போது எழுந்த பிரச்னையில், மண்டை உடைபட்டவர் சிங்கராஜ். அப்போது ரஜினி சாருக்கு அடையாளம் தெரியவில்லை. ‛சார், இவர் தான் உங்களுக்காக மண்டை உடைபட்டவர்’ என ரஜினி சாரிடம் கூறினேன். 


டக்குனு சிங்கராஜை பிடித்துக் கொண்டார் ரஜினிகாந்த், ‛என்ன சிங்கராஜ் எப்படி இருக்கீங்க...’ என நலம் விசாரித்தவர், என்னைப் பார்த்து, ‛நீங்க யாரு...’ என்று கேட்டார். நான் யாருனு கேட்டதற்கு காரணம், நான் அணிந்திருந்த நகை மற்றும் என்னுடைய தோரணை தான் காரணம். ‛எம்.பி., ரித்தீஷ் உடைய பிரதர்,’ என்று என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். ‛என்ன பண்றீங்க...’ என்று என்னிடம் கேட்டார். விமானத்தை விட்டு இறங்கி, பஸ்ஸில் ஏறும் 3 நிமிடத்தில் இவை அனைத்தும் நடக்கிறது. 


விமான நிலையத்தில் ரஜினி சாரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த கேப்பில் தான் இவை அனைத்தும் நடக்கிறது. ‛நான் என்ன செய்கிறேன்’ என ரஜினி சார் கேட்க, ‛பைனான்ஸ் பண்ணிட்டு இருக்கேன் சார்...’ என்று நான் கூறினேன். இப்படி எல்லா பிரபலங்களுடனும் நான் பயணம் பண்ணியிருக்கிறேன். 


எனக்கு கதாநாயகனை பிடிக்காது; வில்லன்கள் தான் பிடிக்கும். கதாநாயகன் ஒரு பொண்ணுக்காக விடிய விடிய காதல் பண்ணுவார்; அது நமக்கு பிடிக்காது. நாலு பெண்களோடு வில்லன் சந்தோஷமா இருப்பார். கடைசியின் அவர் இறந்துவிடுவார் தான், ஆனால் இருக்கும் வரை ஜாலியாக இருப்பார் வில்லன். அதனால் வில்லன்களை தான் எனக்குப் பிடிக்கும். 


இருக்கும் வரை சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது தான் என் பாலிசி. என்னோட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமானால், மிருகன் படத்தில் நடித்த ஆதி தான் சரியாக இருப்பார். அவர் தான், நல்ல கட்டுசட்டா இருப்பார். தோராணை தான் என்றைக்கும் பேசும். ஒரு சாதாரண ரவுடியிடம் போனால் அவன் 50 ஆயிரம் ரூபாய் கேட்பான். அதுவே ஒரு தோரணையான ரவுடியிடம் சென்றால் 5 லட்சம் ரூபாய் கேட்பான்; கண்ணை மூடி கொடுத்துட்டு போய்டுவாங்க. வயிறும் வாயும் ஒட்டிப் போயிருந்தால், ரவுடியை கூட மதிக்கமாட்டாங்க. 


இப்போ டிஜிபி சாரை பாருங்க. செஞ்சு வெச்ச மாதிரி இருக்காரு. அவரை பார்த்த போலீஸ்காரங்களுக்கு ஒரு ஆசை வரும்,’’ என்று அந்த பேட்டியில் வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.