கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலர் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


 சோட்டா மும்பை, தலப்பாவு, மரியா காலிப்பினலு உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா. தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ படத்திலும் நடித்த இவர், தமிழ், மலையாள டிவி சிரீயல்களிலும் நடித்துள்ளார்.


இவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டதால், அடிக்கடி அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். மொத்தமாக 11 அறுவை சிகிச்சை சரண்யா சசிக்கு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக, மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்தார்கள். இந்நிலையில், சரண்யா சசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நடிகை சீமா ஜி.நாயர் கூறினார். இவர், சரண்யாவின் நெருங்கிய தோழி ஆவார். செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு இருக்கும் சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்யுமாறும் சீமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.




நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு, உயிரிழப்புகள் அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


ரம்யா கிருஷ்ணன் Vs வனிதா விவகாரம்; வாழ்த்து தெரிவித்த சுரேஷ் சக்ரவர்த்தி!


கொரோனா தொற்று பாதிப்பு திரையுலகை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் திரைப்பிரலங்கள் பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்தது. 


கடந்த சில மாதங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டி.கே.எஸ் நடராஜன், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், ஜோக்கர் துளசி, நெல்லை சிவா, நடிகர் மாறன், நடிகர் பவுன்ராஜ், நடிகர் ஐய்யப்பன் கோபி, சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் ஆகியோரை திரையுலகம் இழந்துள்ள நிலையில், நடிகர் நிதிஷ் வீராவின் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சிலர் மாரடைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் உயிரிழந்திருந்தாலும், பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவியும் கொரோனாவுக்கு பலியானார். சமீபத்தில் நடிகை கவிதா, கொரோனாவுக்கு தனது மகனும், கணவரையும் இழந்தார். அதுவும் இரண்டு வார இடைவெளியில் இரண்டு பேரையும் இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளார்.


’ஒரு மேசை இல்லை...தெருநாய்கள் சுத்துது’ - டெல்லி விமான நிலையத்திலிருந்து பாகுபலி இயக்குநர் ட்வீட்