1.உனை பார்த்த பின்பு நான்...
‛‛ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ?
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ...’’
காதல் மன்னன் படத்தில் வைரத்து வரிகளில் பரத்வாஜ் இசையில் எஸ்.பி.பி., பாடிய பாடல். காதல் ஏக்கத்தில் கரைபவர்களுக்கு ஆற்றல் தரும் பாடல்!
2.உன்னோடு வாழாத வாழ்வென்ன...
‛‛மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர்பிக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆண் இல்லையே
நீயும் போனால் நான் இல்லையே
நீர் அடிப்பதாலே மீன் நழுவதில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை...’’
அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண்! காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா!
3.பெண்ணொருத்தி பெண்ணொருத்தி ....
‛‛கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
மலை என்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே...’’
வைரமுத்து வரிகளில் ஜெமினி படத்தில் எஸ்.பி.பி., பாடிய இந்த பாடல், வேறு விதமான உலகிற்கு அழைத்துச் செல்லும்!
4.உன்னை நினைக்கவே நொடிகள்....
‛‛நான் உன்னை மறந்த செய்தி
5.பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு....
‛‛மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி
என் மார்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி
ஹே ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி
எஸ்கிமோக்கள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா
காமராஜன் உதட்டில் அட கிஸ் என்ன புதுசா
அட கிஸ் என்றால் உதடுகள் பிரியும்
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்
தகராறு ஏது தமிழ் முத்தம் போடு...’’
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் பரத்வாஜ் இசையில் வைரமுத்து வரிகளில் கே.கே.-ஷ்ரெயா கோஷல் பாடிய பாடல். கேட்க கேட்க தூண்டும் ஜிகர்தண்டா!