காமெடி நடிகர்களான வடிவேலு, விவேக் ஆகியோரின் காம்பினேஷனில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தாரணி. இவர் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார். அதில், இடம்பெற்ற காமெடி காட்சிகளை ரசிகர்கள் இன்றைக்கும் ரசிக்கின்றனர். எரியுதுடி மாலா.. மாலா மாலா போன்ற வசனங்கள் ரசிக்கும்படியே இருந்தன. இந்நிலையில், நடிகை தாரணி அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

சினிமாவில் நடிக்க வந்தப்போ சின்ன கதாப்பாத்திரங்களிலேயே நடிச்சுட்டேன். சில நேரங்களில் நினைத்து பார்ப்பேன். நாம மிஸ் பண்ணிட்டோம். நல்லா வந்திருக்கலாம், நல்ல கேரக்டர்களில் நடிச்சிருக்கலாம்னு கூட நினைத்திருக்கிறேன். என் மகளை பார்க்கும் போது அப்படியே எல்லாம் மாறிடும். இதைவிட என்ன வேண்டும் நமக்கு என தாரணி சிரித்த முகத்துடன் கூறினார். மேலும், பேசிய அவர், சினிமாவை விட சீரியலில் ஒவ்வொரு நாளும் புது விதமா நடிக்கிற மாதிரி இருக்கும். வெளியே பாேகும்போது என்னை பார்த்து பாராட்டுறாங்க. என் கதாப்பாத்திரத்தை பார்த்து மேடம் சூப்பரா பன்றீங்க என்று சொல்லும் போது மனசுக்கு நிறைவாக இருக்கு என்றார். 

என்றைக்குமே என் தொழிலுக்கு துரோகம் பண்ணமாட்டேன். எனக்கு பிடித்த சினிமாவை நான் நேசிக்கிறேன் அது என் பலமாக கருதுகிறேன். அதே நேரத்தில் என் வாய் தான் எனக்கு வீக்னஸ், நான் ரொம்ப லொட லொட ஏதாவது பேசிடுவேன். அதுவே எனக்கு ஆப்பு வைத்துவிடும். அந்த மாதிரி நிறைய நடந்திருக்கு. வாயால வடை சுட்டுக்குவேன். பக்குவமா பேசி பழகனும்யா. வாங்க பேசுவோம் பழகுவோம். பிடிச்சா செய்.. பிடிக்கலைனா விலகிடுவோம் மாதிரி இருந்திருந்தா நல்லா இருக்கும் என சிவாஜி பட வசனத்தை பேசி நடிகை தாரணி கலகலப்பை ஏற்படுத்தினார். 

பின்பு விஜயகாந்த் குறித்து பேசிய அவர், விஜயகாந்த் தங்கம். அவர் மாதிரிலாம் இப்ப யாரையும் பார்க்க முடியாது. படப்பிடிப்பில் ஒருவருக்கு காய்ச்சல், உடல்நிலை மோசமா இருந்தால் உடனே மருத்துவமனைக்கு தான் போக சொல்வாரு. அவர் செலவு பண்ணி ரெஸ்ட் எடுக்க சாெல்வாரு. அவர் கூட 3 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்போ யாருக்காவது முடியலைனா கூட மேம் எப்படியாவது நடிச்சு முடிங்க. டேட் இல்லை, சொல்லி வற்புறுத்துவாங்க. விஜயகாந்த் அந்தமாதிரி சொல்லவே மாட்டாரு. அவர் மாதிரி கோபப்பட முடியாது. அதுவும் செல்ல கோபம் தான் என தெரிவித்தார். 

மேலும், நடிகர் டெல்லி கணேஷ் குறித்து பேசிய அவர், அவ்வை சண்முகி படத்தில் டிரிங்ஸ் சாப்பிட்டு ஜெமினி கணேசன் கிட்ட உண்மையை சொல்ல போவாரு அடி வாங்குவாரு அப்ப ஒன்னு சொல்லுவாரு என்னடா தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறீங்க என்ற வசனம் இன்றைக்கும் ரொம்ப பிடிக்கும். அவர் கூட மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் நடித்திருக்கிறேன். ஒரு கேரக்டர் கொடுத்தா அப்படியே அல்வா சாப்பிடுற மாதிரி டெல்லி கணேஷ் பண்ணுவாரு. அவர் மாதிரிலாம் நடிக்க முடியாது. அவர் இல்லைங்கிறதை ஏற்க முடியலை. இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருக்கலாம் எனக் கூறி நடிகை தாரணி வேதனையடைந்தார்.