பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட். நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்பவர்களுக்கு நன்கு பரீட்சயமான இவர், வெகுஜன மக்களுக்கும் தெரியவந்தது டிவியில் வந்த சமையல்  நிகழ்ச்சிகள் மூலமே. அதுவும், விஜய் டிவி மூலம் மிகவும் பிரபலமானார். அதில் பல விதமான சமையல்களை செய்து பலரையும் கவர்ந்தார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் சென்றார். அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வரும்  செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் காமெடியிலும் கலக்குவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் இரண்டு சமையல் கலைஞர்களுக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. குறிப்பாக பெண்கள் இடத்தில். வெங்கடேஷ் பட்ஸ் இதயம் தொட்ட சமையல் என்ற யூடியூப் சேனல் மூலமும் தனது சமையல் கலையை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். மேலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் சமையல் தொடர்பான வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். தீவிர கடவுள் பக்தரான வெங்கடேஷ் பட், தனது கையில் சாமி கயிறு கட்டிக்கொண்டுள்ளார்.


Samatha Ruth Prabhu | இதுதான் ஹேப்பி மந்திரம்... ஜீரோ மேக்கப் ஃபோட்டோவுடன் அட்வைஸ் கொடுத்த சமந்தா..!


இந்த நிலையில், இதனை கிண்டல் செய்யும் விதமாக திராவிடியன் ஸ்டாக்ஸ் என்ற பேஸ்புக் ஐடியில், ‘ஒரு மிகப்பெரிய செஃப், உணவு சமைக்கும் பொழுது கைககளில் கயிறு எல்லாம் கட்டிக்கொள்ளலாமா. கேட்டா பெரிய செஃப்’ என்று கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.




இதற்கு பதிலளிக்கும் விதமாக செஃப் வெங்கடேஷ் பட், “முறைப்படி பார்த்தால் சமைக்கும்போது பேசவே கூடாது. ஆனால், டிவில அதை பின்தொடர முடியாது. அதுபோல என் கையில் கயிறு இருப்பது என் நம்பிக்கை. கற்றுக்கொடுப்பது  நான் கற்ற விதை. நீங்கள் பார்க்க வேண்டியது என் திறமையை, கையில் உள கயிற்றை அல்ல” பதிவிட்டார். இவரின், இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து பதிவிட்டனர்.


பிரபல சமையல் கலைஞராக வெங்கடேஷ் பட், அக்கார்ட் ஹோட்டல் நிறுவனத்தின் சிஇஓ-ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



செலிபிரிட்டிகளுக்கு சமூக வலைதளம் சவாலானது. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு பின்தொடர்வோரும் பாலோ செய்கின்றனர். பாலோ செய்வது மட்டுமின்றி சில நேரங்களில் நேரடியாக கேள்வியும் கேட்கின்றனர். சில கேள்விகள் ஆக்கப்பூர்வமாகவும், சில கேள்விகள் இது மாதிரி அபத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அதை கடந்து தான் சமூக வலைதளத்தில் செலிபிரிட்டிகள் உலா வரவேண்டியுள்ளது.