நான் நல்ல மகனா? கணவனா? சகோதரனா? என்றெல்லாம் தெரியாது. ஆனால் அதற்காக நான் முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளா ரன்பீர் கபூர்.


ஆலியாபட் - ரன்பீர்கபூர்:


பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக இருந்து, திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஆலியா பட் - ரன்பீர் கபூர். கிட்டதட்ட 5 வருட காதலிற்கு பிறகு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தாங்கள் பெற்றோர்களாகவிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார் ஆலியா. அதன் பிறகு சில மாதங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர்.


ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடி இன்று தங்களின் முதலமாண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ரன்பீர் கபூர் அளித்த பேட்டியொன்றில் பல சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், நான் ஒரு நல்ல மகனா, நல்ல கணவனா? நல்ல சகோதரனா என்பது தெரியாது. ஆனால் எனக்கு என்னை மேம்படுத்திக் கொள்ளும் ஆவல் எப்போதுமே இருக்கிறது. அதனால் நான் சரியான பாதையில் பயணிக்கிறேன் என்று நினைக்கிறேன்.


நற்பண்புகளை கற்றுத்தருவேன்:


நான் எப்போதும் என் குடும்பத்தின் மீது பெரியளவில் ஈடுபாடு கொண்டுள்ளேன்.  நான் என்னுடைய கடின காலங்களில் என் குடும்பத்தில் இருந்தே ஆறுதலையும் தேறுதலையும் பெறுகிறேன்.  நான் தந்தையான பின்னர் என் பெற்றோர் மீதான மரியாதை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. என் பெற்றோர்கள் என்னை நன்றாக வளர்த்துள்ளனர். அவர்கள் கற்றுக் கொடுத்த நற்பண்புகளை நான் என் மகளுக்கும் கற்றுக் கொடுப்பேன். அவளை நன்றாக வளர்ப்பேன்.  இது வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ளும் பாடம் என்று கூறியுள்ளார்.


ஏற்கெனவே குழந்தை பெற்றுக் கொள்வது பற்றிய கேள்விக்கு கடந்த ஆண்டு ரன்பீர் ஒரு சுவாரஸ்ய பதில் கூறியிருந்தார். பேட்டி ஒன்றில், நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வதாக இருக்குறீர்கள்? குறிப்பாக எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு ரன்பீர், எனக்கு 60 வயதாகும் போது எனது குழந்தைக்கு 20 வயதாக இருக்க வேண்டும். குழந்தையுடன் விளையாடவும், பனிச்சறுக்கல்கள் போகவும், மலையேறவும் ஆசைப்படுகிறேன் எனக் கூறியிருந்தார்.






ஆலியாவின் வெற்றிப் பாதை:


பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் தான் ஆலியா நாயகியாக அறிமுகமான முதல் பெண். அதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திற்குப் பின்னர் அவர் கல்லி பாய், டியர் ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். அண்மையில் ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை.