தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக விளங்கும் ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


 




வைரலான புகைப்படங்கள் :


ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில்  இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

வெளியானது ஹன்சிகாவின் திருமண வீடியோ :

 

ஹன்சிகாவின் திருமண வைபவ நிகழ்வுகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் வெளியாகும் என ஏற்கனவே டீசர் வெளியான நிலையில் இன்று அவர்களின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது. திருமணத்தின் சமயத்தில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வெளியானது. மேலும் பிரபலங்களின் வருகை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகாததால் இந்த வீடியோவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தார்கள்.

 




மனம் திறந்த ஹன்சிகா :

 

வெளியான இந்த வீடியோவில் திருமண ஏற்பாடுகள், மண்டப அலங்காரம், மஞ்சள் சடங்கு, மெஹந்தி, சங்கீத், திருமண உடை, மேக்கப் என பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ஹன்சிகா. மேலும் அவர் கூறுகையில்  எனது திருமணம் குறித்து பரவிய தகவல்கள் பேரதிர்ச்சியாக இருந்தது. எனக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது. நான் எப்போதெல்லாம் மனழுத்ததில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் அணுகுவது சோஹைலை தான். அப்படி தான் இந்த விஷயத்தை பற்றி கூறுகையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து சமாளிக்கலாம் என என்னை தேற்றினார். நாங்கள் கணவன் மனைவி என்பதை காட்டிலும் மிக நல்ல நண்பர்கள்.

செலிபிரிட்டினா இதுதான் கிடைக்கும் :

 
எங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த பிறகு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே சமயத்தில் சோஹைல் முதல் திருமணம் விவகாரத்தானதற்கு காரணம் நான் தான் என எழுதியதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு செலிபிரிட்டியாக இருப்பதற்காக எனக்கு கிடைத்த கூலி இதுதான்.




நாங்களும் மனிதர்கள் தான் :

 
சோஹைல் கடந்த வாழ்க்கை குறித்து நான் கவலைப்படவில்லை. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனதார ஏற்றுக்கொண்டோம். அனைவரையும் போல நாங்களும் சக மனிதர்கள் தான், எங்களுக்கும்  உணர்வுகள் இருக்கும். கையில் பேனா கிடைச்சா  நினைப்பதையெல்லாம் எழுதிவிடலாமா? என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

எல்லா புகழும் அம்மாவுக்கே :

என்னுடைய அம்மா தான் எனக்கு எல்லாமே. அவரின் இளமை பருவத்தில்  இருந்தே தனிமையில் வாழ்ந்து வருகிறார். எங்களுக்காக வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளாமல் எங்களை வழிநடத்தினார். என் வாழ்க்கையில் கிடைத்த அனைத்து வெற்றிக்கும் எனது அம்மா தான் காரணம். அவருக்கு தான் அனைத்து பெருமையும் போய் சேரும்.