1,ஆத்தாடி மனசு தான்...
‛‛கிட்ட வந்து நீயும் பேசும் போதுகிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்மூச்சே…. காய்ச்சலா மாறும்..விட்டு விட்டு உன்ன பாக்கும் போதுவெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்மனசே… மார்கழி மாசம்..அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுதுவிழி தெருவில் போகும் உந்தன் உறுவம் தேடுதுபாவி நெஞ்ச என்ன செஞ்சஉந்தன் பேர சொல்லி கொஞ்சஎன்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா...’’
நா.முத்துக்குமாரின் வரிகளில் கழுகு படத்தில் யுவன் இசையில் மெய்மறக்கச் செய்யும் பாடல். பிந்துவின் கண்ணீரும், காதலும் இசையோடு இணைந்து பயணிக்கும்...
2.கொஞ்சும் கிளி பாட வெச்சா...
‛‛ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்சாதன்னந்தனியாக என்ன தானே பேச வச்சாசூரியன போல அவள் கண்ணுல தான் பாக்கையிலசூரதேங்கா ஆனேன் டாகட்டிவச்ச பூவெடுத்து கூந்தலில வெக்கயிலநாரா நானும் போனேன்டாரெட்டகையில் தீபெட்டிய நெஞ்சு குழியில் பத்திகிச்சுவேர ஒன்னும் வேணான்டாஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னும் மட்டும் போதும்னுஜோரா வாழ்ந்து சாவேன்டா...’’
யுகபாரதி வரிகளில் காதலியின் நினைவுகளில் உருகும் பாடல்... விமல்-பிந்து ஜோடி கலக்கியிருக்கும் பாடல்!
3.அம்மாடி... அம்மாடி...
‛‛என்னை நான் பெண்ணாகஎப்பொழுதுமே உணரலஉன்னாலே பெண்ணானேன்எப்படியென தெரியலவிலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலேவிவரம் தெரிந்த பின் ஓடினால்தவறு தான் இதிலேஏனடா இது ஏனடாகள்வனே பதில் கூறடா..’’
டி.இமான் இசையில், யுகபாரதி வரிகளில் ஸ்ரேயா கோஷல் பாடிய ரம்யமான பாடல். ரொமான்ஸ் மெலடி லிஸ்ட்டில் இந்த பாடலுக்கு இடம் உண்டு.
4.என்னடா என்னடா...
‛‛நான் ஓயாத வாயாடி பேசாம போனேன்பொட்டுச் செடி நான் மொட்டு வெடிச்சேன்ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறேனேவிடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனேஉன்னோட பேசிடவே உள்ளூர ஆச கூடிப்போச்சுகண்ணாடி பாத்திரமா என்னோட தேகம்மாறியே போச்சு போச்சுஎன்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சுசொல்லவே இல்லையே..’’
யுகபாரதி வரிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், ஸ்ரெயா கோஷல் பாடிய பாடல். கேட்டுக் கொண்டே இருக்கும் ரகம். பிந்து மாதவியை மையமாக கொண்ட பாடல்!
5.ஏதேதோ.. நினைக்கிறேன்...
‛‛உனக்காக வாழுறேன் மெல்ல
ஓயாம பாக்குற
தீ அள்ளி வீசுற
என் மூச்ச சொல்லாம
நீ வாங்குற
இது புடுச்சிருக்கு
அது ஏன்னு தெரியல
இந்த மனக்கிறுக்கு
உள்ளாற வாலாட்டுதே...’’
சித்தார்த் பிவின் இசையில் ஜாக்சன் துரை படத்தில் சின்மயி, கார்த்திக் பாடிய பாடல். திகில் படத்தில் வரும் டூயட். கேட்கவும், பார்க்கவும் அழகானது.
இது போன்று இன்னும் பல ஹிட் டூயட்டுகள் பிந்துவின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை இமான் இசையமைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு: ‛இன்ஜினியர் டூ ஹீரோயின்’ பிறந்தநாள் கொண்டாடும் பிந்து மாதவி ஆல்பம்!