விஜய் தேவரகொண்டா - மிருணாள் தாக்கூர் நடிப்பில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ஃபேமிலி ஸ்டார். பரசுராம் இயக்கியுள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.


ஃபேமிலி ஸ்டார் தமிழ் ட்ரெய்லர்


இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்துக்காக விஜய் தேவரகொண்டா முதன்முறையாக தமிழில் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்துள்ளார். இந்நிலையில், இன்று இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்டதுடன் பத்திரிகையாளர்களை விஜய் தேவரகொண்டாவும், தயாரிப்பாளர் தில் ராஜூவும் சந்தித்தனர். அப்போது தில் ராஜூ பேசியதாவது: 


பாராட்டிய தளபதி விஜய்


“தமிழ்நாடு மீடியோ நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, விஜய் சார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் ஃபைட் வேணுமா, சாங் வேணுமா என்று பேசினேன். விஜய் சார் அப்போது சொன்னார். தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான தயாரிப்பாளராக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று. எல்லாருக்கும் நன்றி. நான் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுக்க விரும்பினேன். எனக்கு சரியாக தமிழ் தெரியாது. தமிழ் வார்த்தைகள் தெரியும், வாக்கியங்கள் தெரியாது. 


தமிழ்நாட்டில் தாலி ஃபேமஸ்


தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் படத்தைத் தயாரித்துள்ளேன். இது தமிழில் என் இரண்டாவது திரைப்படம். விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் ஏற்கெனவே இங்கு வரவேற்பைப் பெற்றது. சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஃபேமஸ் என்றால் முதலில் ஃபில்டர் காஃபி, பின் சாம்பார் - இட்லி, அதன் பின் தாலி.


அதுதான் ஃஃபேமிலி ஸ்டார் திரைப்படம். காஃபி இருக்கு, இட்லி - சாம்பார் இருக்கு, அப்புறம் தாலி இருக்கு. அதனால் இப்படம் ஃபுல் மீல்ஸாக இருக்கும். நீங்கள் அனைவருமே  உங்கள் குடும்பத்தின் ஃபேமிலி ஸ்டார். எனவே நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை தொடர்புபடுத்தி பார்ப்பீர்கள் ” எனப் பேசியுள்ளார்.