கர்ணன் படத்தைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ’மாமன்னன்’.


நட்சத்திரப் பட்டாளம்...


ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, உதயநிதி ஆகியோர் ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளனர்.


ஷூட்டிங்கில் ஃபஹத்...


இந்நிலையில் இன்று  நடிகர் ஃபஹத் ஃபாசில் மாமன்னன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். ஏற்கெனவே இது உறுதிசெய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.






இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், ஃபஹத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இதையும் படிங்க: Vikram Movie : விக்ரம் படத்தின் பாகம் 3 -ல் சூர்யா?கமல் தந்த புது அப்டேட்


ரிலீஸூக்கு தயாராக உள்ள படங்கள்...


சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஃபஹத் நடிக்கும் மற்றொரு மல்டி ஸ்டாரர் படமான ’விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது.


விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டோரும் நடிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 3ஆம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.


இவை தவிர, மலையான்குஞ்சு, ஷெர்லாக் உள்ளிட்ட படங்களிலும் ஃபஹத் ஃபாசில் பிரதாக கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


இதையும் படிங்க: Watch Video: மாஸ் காட்டும் ஃபஹத்.. நச் வீடியோ வெளியிட்டு 'விக்ரம்' அப்டேட் கொடுத்த லோகேஷ்! Watch Video: மாஸ் காட்டும் ஃபஹத்.. நச் வீடியோ வெளியிட்டு 'விக்ரம்' அப்டேட் கொடுத்த லோகேஷ்!



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண