நேற்று ஃபஹத் பாசிலின் 40-வது பிறந்தநாள், இந்த ஸ்பெஷல் நாளில் அவரது மனைவியும் நடிகையுமான நஸ்ரியா அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.


பிறந்தநாள் பதிவு


வைரலாக இந்த பதிவில் அவர், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர். ஹஸ்பண்ட்… ஒயின் போல வயதாகிறது... வருடம் செல்ல செல்ல இன்னும் சிறப்பாகிறது... " என்று எழுதி உள்ளார். அந்த புகைப்படங்களில், இருவரும் சேர்ந்து கேக் வெட்டும் காட்சிகள் உள்ளன. இந்த பதிவை வெளியிட்ட சிறிது நேரத்தில், கமெண்ட் செக்ஷன் பிறந்தநாள் வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்தது. காளிதாஸ் ஜெயராம், பிருத்விராஜ் சுகுமாரன் என பல பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



மலையன்குஞ்சு


அடுத்ததாக, ஃபஹத் பாசில் மலையாள சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான மலையன்குஞ்சு என்னும் திரைப்பட வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் OTT வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சஜிமோன் பிரபாகர் இயக்கும் இப்படத்தில் ராஜிஷா விஜயன் மற்றும் இந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Jasprit Bumrah Ruled Out: ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு... பும்ரா விலகலா?-காரணம் என்ன?


கதைக்களம்


இடுக்கி பகுதிகளில் காலம் காலமாக நடந்து வரும் நிலச்சரிவு பிரச்சனையை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிக் கொள்ளும் ஒரு மனிதனின் உயிர்ப் பயணத்தை விவரிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தரைமட்டத்திற்கு அடியில் 40 அடிக்கு கீழே படமாக்கப்பட்டுள்ளது. மகேஷ் நாராயணன் கதை என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மலையாளத்தில் இசையமைக்கிறார்.



புஷ்பா 3


இந்த படத்தின் ப்ரோமோஷன்களின் போது கொடுத்த நேர்காணல்களில், ஃபஹத் பாசில் புஷ்பா மூன்றாவது பார்ட் எடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறி இருந்தார். மூன்றாவது பாகம் எடுப்பதற்கு இயக்குனர் சுகுமாரிடம் போதிய ஸ்கோப் மற்றும் கண்டெண்ட் உள்ளது என்றார். இதற்கிடையில், புஷ்பா: தி ரைஸ் என்று தலைப்பிடப்பட்ட இரண்டாவது பாகத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் உடன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.