Money Heist வெப் சீரிஸிற்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமடைந்த வெப் சீரிஸாக மாறியுள்ளது , Squid Games . இது குறித்த அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியான கொரியன் சீரிஸ்தான் ஸ்குவிட் கேம்ஸ் . இந்த சீரிஸை இளம் இயக்குநர் Hwang Dong-hyuk என்னும் தென் கொரிய கலைஞர் இயக்கியுள்ளார். நம் ஊரில் 90களின் பாரம்பரிய விளையாட்டான பம்பரம் , கோலி , டயர் ஓட்டுதல் போலவே , கொரியாவில் சில பாரம்பரிய விளையாட்டுகள் இருக்கின்றன. அதனை விளையாடி , சக போட்டியாளர்களை யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு பல மில்லியன் கணக்கிலான பணம் பரிசுத்தொகையாக கிடைக்கும்.என்பதுதான் சீரிஸின் ஒன்லைனாக இருந்தாலும், த்ரில்லர் சீரிஸாக உருவாக்கப்பட்டிருப்பதால் மாறுபட்ட கோணத்தில் பல ட்விஸ்டுகளை வைத்து , இரத்தம் தெறிக்க சீரிஸை உருவாக்கியிருப்பார் இயக்குநர். வெளி உலகத்தில் கடனால், வறுமையால் இன்னலுக்குள்ளாகும் நபர்களை மட்டுமே தேடி தேடி பிடிக்கிறது விளையாட்டு குழு. அவர்களுக்கு பணத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி , விளையாட்டிற்குள் இழுக்கிறது. விளையாடும் போட்டியாளர்களுக்கு இடையே காதல், கோபம், வஞ்சம் , அழுகை, பாசம் என மனிதர்களுக்கே உரித்தான குணங்களை புகுத்தி , ரசிகர்களுக்கு திக் திக் நிமிடங்கள் பலவற்றை கொடுத்திருப்பார் இயக்குநர் ஹ்வாங் டாங் ஹ்யூங்.
Squid Games வெளியாகி முழுமையாக ஒருமாதம் ஆகாத நிலையில் அதனை 111 மில்லியன் அக்கவுண்டில் இருந்து பயனாளர்கள் பாத்திருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க 94 நாடுகளில் Squid Games வெப் சீரிஸானது முதல் 10 இடத்தை பிடித்துள்ளதாம்.முன்னதாக கடந்த ஆண்டு வெளியான Birdgerton என்னும் வெப் சீரிஸ் , 28 நாட்களில் 82 மில்லியன் பார்வையாளர் கணக்குகளுடன் சாதனை படைத்திருந்தது . இந்நிலையில் அதனை அசுர வேகத்தில் முறியடித்துள்ளது Squid Games .இதுவரையில் வெளியிடப்பட்ட கொரியன் சீரிஸிலேயே, அமெரிக்காவில் நம்பர் 1 என்ற அங்கீகாரத்தை பெற்ற சீரிஸ் Squid Games தான் என்கிறது நெட்ஃபிளிக்ஸ்.Squid Games வெற்றிக்கு பிறகு அதில் நடித்த நடிகர்களின் நடிப்பில் வெளியான பல சீரிஸ் மற்றும் படங்களை ஜானர் வாரியாக வெளியிட்டு வருகிறது நெட்ஃபிளிக்ஸ்.