கோலிவுட் சினிமாவில் லவ் பேர்ட்ஸாக வலம் வரும் ஜோடிகள்தான் நயன்தாரா விக்னேஷ் சிவன். நானும் ரௌடிதான் திரைப்படம் மூலமாக விக்னேஷ் சிவன் நயன் தாரா கூட்டணி அமைத்தனர். அந்த படத்திற்கு பிறகு நெருங்கிய நண்பர்களான இருவரும். காதல் வலையில் சிக்கியிருப்பதாக கிசு கிசுக்கப்பட்டனர். ஆனால் இதனை ஜோடிகள் உறுதிப்படுத்தாத நிலையில் அவ்வபோது விக்னேஷ் சிவன் வெளியிடும் பதிவுகள் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கப்புளாக வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. விக்னேஷ் சிவனின் அரவணைப்பில் இருக்கும் நயன் தாரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் இல்லை . அவருக்கென தனி சமூக வலைத்தள பக்கங்களும் இல்லை. ஆனால் விக்னேஷ் சிவனோ சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவ். தனது படங்கள் குறித்த அப்டேட் மட்டுமல்லாமல் நயனின் அப்டேட்டையும் சேர்த்து விக்னேஷ் சிவன்தான் பார்த்துக்கொள்கிறார். சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட கிருஸ்துமஸ் வாழ்த்து புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து இந்த காதல் பறவைகள் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைத்திருக்கு புதிய பிளான் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது விக்கி மற்றும் நயன் துபாயில் முகாமிட்டுள்ளார்களாம். வருகிற வெள்ளிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாட இருப்பதாக சில தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த ஜோடிகளின் வெளிநாடு சுற்றிப்பயண புகைப்படங்கள் இணையத்தில் இன்றும் வைரலாகும் சூழலில், புத்தாண்டில் அவரது ரசிகர்களுக்கு ஏராளமான எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் வெளியாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
விக்னேஷ் சிவன் நயன்தாரா வெறும் காதலர்களாக மட்டும் இல்லாமல் பிஸினஸ் பார்ட்னராகவும் உள்ளனர். ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி , பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் இறுதியாக வெளியான ராக்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கூழாங்கல் என்னும் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல விறுதுகளை குவித்துள்ளது. நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தையும் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.