கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் சாமானிய மக்களையும் அங்கீகரிக்கும் வகையில் ஆற்றல் விருதுகள் என்ற பெயரில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றனர். சாமானிய மக்களை அங்கீகரிக்கும் வகையில் தூய்மைப் பணியாளர் தச்சர் தையல் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபாட்டுடன் சிறப்பாக செய்துவரும் 60க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 



நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், முதலமைச்சர் என்று சொன்னால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற ஆற்றல். அந்த ஆற்றலின் மூலமாக தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான அன்பை பெற்றுள்ளார். அந்த அன்பின் மூலமாக இந்தியாவில் உள்ள முதல்வருக்கெல்லாம் முதல்வராக தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகிறார். கலைத்துறையில் நடிப்பாக இருந்தாலும், வசனமாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முதல் நபராக நின்று உதவக்கூடியவர் பார்த்திபன். அவர் புதிய பாதையில் பயணிப்பவர்.



திரை உலகம் மட்டுமல்ல தமிழ் உலகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற உயரிய சிந்தனை உடையவர். இரண்டாயிரம் கோடிகளுக்கு மேலான நிதிகளை தந்து கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தமிழக முதல்வர் தந்துள்ளார். முதல் ஆண்டில் 2,000 கோடி, அடுத்த ஆண்டில் இன்னும் பல சாதனைகளை சாதனை திட்டங்களை முதல்வர் வழங்கி இருக்கின்றார். 2030ஆம் ஆண்டுக்குள் கரூரில் 20 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற வேண்டும் என்ற இலக்கு கரூர் தொழில் முனைவோர்களுக்கு உள்ளது. அந்த இலக்கை எட்ட முழுமையான ஆற்றலை நாம் பயன்படுத்த வேண்டும். 



ஆதிதிராவிட பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவிகளை மறைந்திருந்து போட்டோ எடுத்த 4 முன்னாள் மாணவர்கள் கைது


என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள என் மண்ணின் மக்களான கரூர் மக்களின் பாதங்களை தொட்டு என் வாழ்நாளை சமர்ப்பிக்கிறேன். என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்து என் பெற்றோரைப் போல கவனித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.


அரசு அதிகாரிகள் இளக்காரமாக நடத்துகின்றனர்-பிடிஓ அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் போராட்டம்