ஹோட்டல் பில்லைக் கூட கட்டாத முதல் கணவர் - பிரபல நடிகை பரபரப்பு புகார்
நான் நேர்மையானவள். நான் தவறாக சித்தரிக்கப்பட்டேன். இப்போது நான் அதை தெளிவுபடுத்தியுள்ளேன்.

தனது முதல் கணவர் ஹோட்டல் பில்லைக் கூட கட்டவில்லை என்று பிரபல நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார்.
நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமானவர் நுஸ்ரத் ஜஹான். இவர், சில மாதங்களுக்கு முன்பு தனது முதல் கணவர் நிகில் ஜெயினை பிரிந்தார். இதனிடையே, கர்ப்பமான இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தந்தை யாஷ் குப்தா என்று தெரியவந்தது. இதனால், நுஸ்ரத் ஜஹான் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டார். கணவரை பிரிந்த அவர் எப்படி கர்ப்பமானார், அவருக்கு குழந்தை பிறந்தது எப்படி? என்று சமூக ஊடகம் மற்றும் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
Just In




இதனிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நுஸ்ரத் ஜஹான் ஒரு அறிக்கையில் நிகிலுடனான தனது திருமணம் இந்திய சட்டத்தின்படி செல்லாது என்று கூறினார். நுஸ்ரத் ஜஹான் மற்றும் நிகில் ஜெயின் 2019 இல் துருக்கியில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது முதல் திருமணம் தொடர்பான சர்ச்சை குறித்து நுஸ்ரத் கூறுகையில், “என் திருமணத்திற்கு அவர்கள் பணம் கொடுக்கவில்லை, ஹோட்டல் கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர்களிடம் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் நேர்மையானவள். நான் தவறாக சித்தரிக்கப்பட்டேன். இப்போது நான் அதை தெளிவுபடுத்தியுள்ளேன். மற்றவர்களைக் குறை கூறுவது அல்லது மற்றவர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டுவது எளிது. என் திருமண விஷயம் குறித்து நாடாளுமன்ற செயலகத்துக்கு கூறிவிட்டேன்” என்று கூறினார்.
மேலும் செய்திகள் படிக்க:
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்