மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான நீர்நிலைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கின்றன. மேலும் சில இடங்களில் விவசாயிகள் பயிரிட்ட நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தநிலையில் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள புலிப்பட்டி, ஐயர்பட்டி, பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி, வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர், கணக்குதுறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

 

இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 








 

தொடர்ந்து வணிகவரி அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் ஆணைப்படி வெள்ளபாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றோம். 15 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் குறைந்தளவே அதாவது 10 ஹெக்டர் பரப்பளவு மட்டுமே பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனையும் தமிழ்நாடு முதல்வர் உத்தரவுபடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  மேலும் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்தார்.






 

மேலும் மேலூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக பாதிப்பு இல்லை என்றாலும், ஓரளவு பரவலாக பாதிப்பு என்பது இருக்கிறது. எனவே அதிகாரிகள் முறையாக கணக்கிட்டு நிவராணங்கள் வழங்க வேண்டும். மேலுர் பகுதியில் கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் பல்வேறு விவசாயிகளின் வீடுகள் சேதமடைந்துவிட்டது. எனவே அதிகாரிகள் அப்பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டு நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்றனர்.