நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை எரிகா பேக்கார்ட் வெளியிட்டுள்ள டாப்லெஸ் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்பீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனில் வெளிப்படுத்தும் எப்போதும் இளமை துள்ளும் எனர்ஜியால் நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.  இதே ரன்வீர் தான் கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில்  ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் ஆக மாறினார். 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.






ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலான  முயற்சியை பாராட்டினாலும் மறுபுறம் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஆலியா பட், ராக்கி சாவந்த் ஆகியோர் ரன்வீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனிடையே ரன்வீருக்கு போட்டியாக நடிகை உர்ஃபி ஜாவித் மேலாடையின்றி நேற்றைய தினம் டாப்லெஸ் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர வைத்தார்.


அந்த வகையில் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நடிகை எரிகா பேக்கார்ட் மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்டுள்ளார். ரோஹித் ஷெட்டியின் 'கத்ரோன் கே கிலாடி 12' போட்டியாளர்களில் ஒருவராக களம் கண்ட எரிகா பேக்கார்ட் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண