RT4GM: நோ சொன்னாரா விஜய்... ரூட்டை மாற்றிய வீரசிம்ஹாரெட்டி இயக்குநர்!
நடிகர் ரவி தேஜா மற்றும் பிரபல இயக்குநர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி, தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது. திரைத்துறையில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் இக்கூட்டணியும் ஒன்றாகும். இந்த வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக தற்போது இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் RT4GM படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/rt4gm-raviteja-gopichand-movie-update-thaman-s-joins-for-a-new-movie-details-127775/amp
Indo French Film Festival: சிறந்த நடிகை விருது வென்ற தமன்னா.. உதயநிதிக்கும் விருது.. குவியும் வாழ்த்துகள்..!
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/indo-french-international-film-festival-june-2023-winners-list-udhayanidhi-stalin-bags-best-producer-check-complete-list-of-winners-127769/amp
Vanitha Vijayakumar: 'தமிழ் சினிமாவின் ஷாருக்கான் இவர்தான்' - நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன பிரபலம் யார் தெரியுமா?
அநீதி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/actress-vanith-vijayakumar-speech-in-aneethi-movie-press-meet-127736/amp
CWC 4 Finalist: குக் வித் கோமாளி ஃபைனல்.. முதல்முறையாக தேர்வான சிவாங்கி.. குவியும் வாழ்த்து
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களில் அனைவராலும் பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அமோகமான வாய்ப்புகள் வரும். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/television/cook-with-comali-4-sivaangi-enters-finals-becomes-finalist-in-reality-show-for-first-time-cwc-4-127737/amp
Achani Ravi Passes Away : 20 தேசிய விருதுகள்.. கேரள சினிமாவை உலகிற்கு கொண்டு சேர்த்தவர்.. தயாரிப்பாளர் அச்சானி ரவி 90 வயதில் மரணம்
கேரளத்தில் புது அலை சினிமாக்கள் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் ரவி. 1970 மற்றும் 1980 களில் ஜெனரல் பிக்சர்ஸ் என்கிற பெயரில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் அச்சானி ரவி என்கிற ரவிந்திரநாத் நாயர். மலையாள சினிமாவில் பல முக்கியமானத் திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவர் தயாரிப்பில் வெளிவந்த அச்சானி என்கிறப் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் ரவிந்திரநாத் நாயர் என்கிற அவரது பெயர் அச்சானி ரவி என்று மாறியது. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/achani-ravi-death-malayalam-producer-businessman-achani-ravi-passes-away-at-90-127638/amp