200 ரூபாய் சம்பளம்.. சூப்பர்ஸ்டாருக்கு இணையான ரசிகர் கூட்டம்.. இன்று ரகுவரன் பிறந்தநாள்..


தென்னிந்திய சினிமா கண்ட ஒரு மாபெரும் வில்லன் நடிகர் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடிகர் ரகுவரனாகத்தான் இருக்க முடியும். பெரிய அளவில் வசனங்கள் பேசாமல் முகத்தில் கொடூரமான உணர்ச்சியையும் குரலில் ஒட்டுமொத்த வில்லத்தனத்தையும் காட்டி திரையை தாண்டியும் பயத்தை பார்வையாளர்களுக்கு கடத்தி விட கூடிய அசாத்தியமான நடிகர் ரகுவரன். இந்த ஈடு இணையில்லா ஒன் அண்ட் ஒன்லி கலைஞனின் பிறந்தநாள் இன்று. மேலும் படிக்க


பெரிய இயக்குநர்கள் இந்த வேலையை பண்றாங்க.. பரபரப்பு பேட்டியளித்த ஜோதிகா..


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா மலையாள ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்துள்ளார். முதன் முதலில் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து ஜோதிகா நடித்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. தன்பாலின கணவனுக்கு விவாகரத்து கொடுக்கும் ரோலில் நடித்த ஜோதிகா ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு ஜோதிகா அளித்துள்ள நேர்க்காணலில், தமிழ் சினிமா குறித்து பலவற்றை பகிர்ந்து கொண்டார். மேலும் படிக்க


நியாயமா பாத்தா த்ரிஷா தான் உங்க மேல கேஸ் போடணும்.. மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!


நடிகை த்ரிஷா பற்றி அவதூறாக பேசியதைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. லியோ படத்தில் த்ரிஷாவுடன் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இல்லை என்று மன்சூர் அலிகான் பேசியதற்கு நடிகை த்ரிஷா கடுமையாக எதிர்வினையாற்றினார்.இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்னை படுவேகமாக இணையத்தில் சூடுபிடித்தது. மேலும் படிக்க


"நீ இல்லை என்பதை நம்ப முடியவில்லை.." மகளை நினைத்து சோகத்தில் விஜய் ஆண்டனி மனைவி!


கடந்த செப்டம்பர் மாதம் விஜய் ஆண்டனியின் 16 வயதான மூத்த மகள் மீரா திடீரென தற்கொலை செய்து கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் உள்ள அவர்களின் வீட்டில் காணப்பட்டார். கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து தான் மீராவின் தற்கொலைக்கான காரணமாக சொல்லப்பட்டது. மேலும் படிக்க


வான்கடே மைதானத்தில் ரஜினிகாந்தை பார்த்து மெய்மறந்தேன்.. உணர்ச்சிவசப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர்!


தன்னுடைய நடிப்பு மற்றும் ஸ்டைலுக்காக ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்கள் ரஜினியைக் கொண்டாடி வருகிறார்கள், காலத்திற்கு ஏற்ற வகையில் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் கதைகளில் மாற்றங்கள் செய்து இளம் தலைமுறை இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார். சாமானிய மக்கள் தவிர்த்து இந்திய சினிமாவில் பெரும்பாலான  நடிகர்கள் , இயக்குநர்களும் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். ரஜினியை எப்படியாவது ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்கிற ஆசை இல்லாதவர்கள் குறைவுதான். மேலும் படிக்க


உடைந்து அழுத விஷ்ணு.. ஆறுதல் சொன்ன விசித்ரா.. பிக்பாஸில் இன்று!


ரேஷன் பொருள்கள் கேப்டன் சரியாகக் கையாளவில்லை, எண்டர்டெய்ன்மெண்ட் இல்லை, பாரபட்சம் பார்க்கிறார், கேப்டனாக இருந்து கொண்டு கேங்க் சேர்ந்து விளையாடுகிறார் என விஷ்ணு மீது அடுக்கடுக்கான புகார்களை நேரிலும்,  கேமராவில் பதிவாகும்படியும் ஹவுஸ்மேட்ஸ்கள் தொடர்ந்து புகார்களை பதிவு செய்து வந்தனர். விஷ்ணுவின் முன்கோபம் அவர் கேப்டன் என்பதைத் தாண்டி சென்ற வாரமும் எட்டிப்பார்க்க, அதுவே அவருக்கு பின்னடைவைத் தந்தது. மேலும் படிக்க