வெளியானது ‘படை தலைவன்’ First Look வீடியோ! பிறந்த நாளில் மகனுக்காக தந்தை விஜயகாந்த் செய்த செயல்!
நடிகர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படை தலைவன் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் படைவீரன். வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய யு. அன்பு இப்படத்தை இயக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் படிக்க
பிரமாண்டமாக நடைபெறும் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ... ரஜினி பங்கேற்கிறாரா?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கங்கனா ரனாவத் ஹீரோயினாக நடித்துள்ளார். வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
‘என்னங்க படம் இது’ .. டைம் டிராவலில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்.. ‘அடியே’ பட விமர்சனம் இதோ..!
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘அடியே’. இந்த படத்தில் கௌரி கிஷன் நாயகியாக நடித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு முக்கிய கேரக்டரில் இடம் பெற்றுள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் அடியே படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். மேலும் படிக்க
தேசிய விருது வென்ற அல்லு அர்ஜூன்.. முதல் தெலுங்கு நடிகர் இவர்தான்: செம குஷியில் ரசிகர்கள்
2021ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது. தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பாகம் 1) படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
அம்மாடியோவ்.. 525 கோடி ரூபாய்.. எல்லா ரெக்கார்டுகளையும் விரட்டிய ஜெயிலர்.. வசூலில் சந்திரயான் பட்ஜெட்டை நெருங்கி அசத்தல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் வரலாறு படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரின் கடைசி சில படங்கள் சரியான வெற்றியையும் எதிர்பார்த்த கலெக்ஷனையும் பெறாததால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக இருந்தது. இதற்கு ஏற்றவகையில் படக்குழுவும் மிகவும் கவனத்துடன் செயல்பட்டது. குறிப்பாக படத்தின் புரோமோஷன்கள் மிகவும் பிரமாண்டமாக செய்யப்பட்டன. மேலும் படிக்க
சரிந்து கிடந்த ஹாலிவுட் சினிமா...தூக்கி நிறுத்திய இரண்டு படங்கள்...பார்பென்ஹெய்மர் செய்த சாதனை
மொத்தம் 4 பில்லியன் வசூல் செய்து கொரோனா நோய் தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டும் திரையரங்கங்களின் லாபத்தை பெருக்கியுள்ளன பார்பீ மற்றும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படங்கள்.. கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா நோய்தொற்று சினிமா மீது ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சம் இல்லை. மக்கள் பெருந்திரளாக திரையரங்குகளில் வந்து படம் பார்க்கும் காலம் முடிந்துவிட்டது என்றுகூட கருத்துகள் பரவத்தொடங்கியிருந்தன. அதே நேரத்தில் ஓடிடி தளங்களின் அசுர வளரச்சியின் காலமும் இந்த காலம்தான். மேலும் படிக்க