பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கங்கனா ரனாவத் ஹீரோயினாக நடித்துள்ளார். வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 25) நடைபெறவுள்ளதாக முதலில் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று (ஆகஸ்ட் 24) தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வேட்டையன் ராஜா, சந்திரமுகி கேரக்டரின் தோற்றம் வெளியானது. சந்திரமுகியின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி “ஸ்வாகதாஞ்சலி” பாடல் முதல் பாடலாக வெளியானது. ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடலை சைதன்யா பிரசாத் எழுதியிருந்தார்.
இதனையடுத்து மொருனியே என்னும் பாடலும் வெளியானது. இந்த மொருனியே பாடலை கேட்கும் போது ஆர்.ஆர்.ஆர். பாடல் தான் நியாபகம் வருவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்தனர். எஸ்.பி.பி. சரண் மற்றும் ஹரிகா நாராயண் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளதாக சந்திரமுகி2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி முதல் பாகத்திற்கு இன்றளவும் இருக்கும் ஆர்வம் சந்திரமுகி 2 விற்கு படக்குழு காட்டவில்லையோ நேற்று அறிவித்து இன்றைக்கு இசை வெளியிட்டு விழா நடத்துகிறார்களே என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்தாரா ஆதி? - எப்படி இருக்கு பாட்னர் திரைப்படம்: முழு விமர்சனம்!
‘என்னங்க படம் இது’ .. டைம் டிராவலில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்.. ‘அடியே’ பட விமர்சனம் இதோ..!