• தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி 


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே நடந்து வந்தது.இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். 




  • கால்பந்து போட்டி நடுவராகச் சென்றபோது மாரடைப்பு...பிரபல மலையாள நடிகர் கவலைக்கிடம்




மின்னல் முரளி, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், குருதி உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் மலையாள மம்மூக்கோயா. இவர் கேரள மாநிலம், களிகவு மாவட்டத்தின் நடைபெற்ற கால்பந்து போட்டியின் விருந்தினராகக் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மம்மூக்கோயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க




  • பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீ-மேக்? இயக்குநர்-ஹீரோ இவர்கள்தானா?




சாதிய ஒடுக்குமுறைகளை மைய்யமாக வைத்து 2018ஆம் ஆண்டு வெளியான படம், பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியாகியிருந்தது. இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை பிரபல இந்தி இயக்குநர் கரண் ஜோஹர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகனாக கெஹ்ரயான் படத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க



  • யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு... மீண்டும் ஜூலை மாதம் ஆஜராக உத்தரவு!


கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது பள்ளித்தோழி உள்ளிட்ட மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று விட்டு சென்னை திரும்பியபோது நடிகை யாஷிகா சென்ற கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகா தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஆஜரானார். மேலும் படிக்க




  • ஆதித்த கரிகாலன் - நந்தினியின் ஒரு நிமிட பாடல் வீடியோ வெளியீடு!




‘பொன்னியின் செல்வன் 2’  படத்தில் இடம்பெற்றுள்ள  ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகி வரவேற்பை  பெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஹரிசரண் இந்தப் பாடலைப் பாடியுள்ள நிலையில் , இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் படிக்க