‘பொன்னியின் செல்வன் 2’  படத்தில் இடம்பெற்றுள்ள  ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் ரு நிமிட வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


பொன்னியின் செல்வன் படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


முதல் பாகம் சுமார் 500 கோடிகள் வரை வசூலித்து இமாலய ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகத்துக்கு நாளொரு ப்ரொமோஷன் பொழுதொரு அப்டேட் என வழங்கி படக்குழுவினர் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் விக்ரமின் ஆதித்த கரிகாலன், ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுப்பூர்வமான காதல் பாடலான ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஹரிசரண் இந்தப் பாடலைப் பாடியுள்ள நிலையில் , இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.


முன்னதாக இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான நிலையில், நந்தினி - ஆதித்த கரிகாலன் இடையிலான காதல் நினைவுகள், கோபம் என உணர்வுப் போராட்டமாக இந்தப் பாடலின் வரிகள் அமைந்திருந்தன.


இந்நிலையில் இந்தப் பாடலின் ஒரு நிமிட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சிறுவயது ஐஸ்வர்யா ராயாக  ‘தெய்வத்திருமகள்’ புகழ் சாரா நடித்துள்ள நிலையில்,  ஆதித்த கரிகாலன் - நந்தினி மீண்டும்  சந்திப்பது, அவர்களது சிறு வயது காதல் காட்சிகள் ஆகியவை இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன.


 



இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.  இதேபோல் முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை -வந்தியத்தேவன் இடையேயான காதல் பாடலான அகநக பாடலினி 10 நொடி க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


மணிரத்னத்தின் வழக்கமான மேஜிக்கல் காதல் காட்சியுடன் வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் இதயங்களைக் குவித்து வருகிறது.


சென்ற ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஒவ்வொரு பாடலும் ஹிட் அடித்து ஒட்டுமொத்த ஆல்பமும் ரசிகர்களின் விருப்பமான ஆல்பமாக மாறியது. 


கடந்த மார்ச்.29ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று (ஏப்.23) இந்த இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.


ஜெயம் ரவி, ஜெயராம்,  கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ள நிலையில், பட வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.