என்னைத்தேடி வந்து பேசினார் அமீர்கான்.. பார்த்திபன் சொன்னது என்ன?
தமிழ் சினிமாவில் 64 ஆண்டுகளாக பயணித்து வரும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் இந்தி கன்னடம் , மலையாளம் திரையுலக பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
ரஜினி - கமல் நடிப்பில் ‘ஜிகர்தண்டா 2’..கார்த்திக் சுப்பாராஜ் பகிர்ந்த சுவாரஸ்யம்!
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் ட்ரெலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. வரும் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது இப்படம். மேலும் படிக்க
ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ.. 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என எச்சரிக்கை..!
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் அதன் ஒரிஜினல் வீடியோ நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும் தெரியவந்தது. ரஷ்மிகாவின் இந்த முகம் சுளிக்க வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டதற்கு திரை பிரபலங்கள் பலரும் அவர்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் படிக்க
விஜய் நினைத்தால் இதை செய்யலாம்; அவருக்கு அந்த எண்ணமே இல்லை - போஸ் வெங்கட் ஓபன் டாக்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி அங்கே நட்சத்திர நடிகராக பலர் ஜொலித்து வரும் வேளையில் ஒரு சிலர் குணச்சித்திர நடிகர்களாகவும் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'மெட்டி ஒலி' சீரியலின் மூலம் அறிமுகமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த போஸ் வெங்கட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன் மூலம் குணச்சித்திர நடிகராக, வில்லனாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க
தவுலூண்டு ஆங்கர்தான் கப்பலையே நிறுத்துது.. சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவுசெய்யும் வெற்றிமாறன்
கடந்த 2006 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் வெளியாகியது. பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துள்ளன. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்ட வெற்றிமாறன் போட்டியாளர் ஒருவரை விமர்சிக்க நேர்ந்தது. இந்த குறும்படத்தில் இருக்கும் முக்கிய கதாபாத்திரம் சும்மா நின்றுகொண்டிருக்கும்போது ஒரு கட்டெறும்பை பார்த்ததும் அதை காலால் நசுக்கி கொன்றுவிடும். மேலும் படிக்க