Enrique Iglesias : ரசிகைக்கு மேடையில் வைத்து முத்தம்... வைரலாகும் பாடலாசிரியர் வீடியோ!

என்ரிக் லெகசியாஸ் என்ற ஸ்பானிஷ் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியரான இவர் தனது ரசிகை ஒருவரை மேடையில் முத்தமிட்ட வீடியோவை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Continues below advertisement

என்ரிக் ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த பாடகர் மற்றும் பாடல் ஆசிரியர், இவர் தனது   இசை பயணத்தை 1990களில் தொடங்கிவிட்டார். தற்போது உலக அளவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவரது இங்கிலீஷ் ஆல்பமான யூனிவர்சல் மியூசிக் லெட்டினோ என்ற ஆல்பம் இவருக்கு உலக அளவில் புகழை வாங்கி தந்தது.

Continues below advertisement

 

இவருடைய லத்தின் ஆல்பம் ஒன்று 70 மில்லியனை தாண்டி விற்று சாதனை படைத்துள்ளது.

பாடகர் ஆன என்ரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.  அந்த வீடியோவில், அவருடைய ரசிகை ஒருவர் புகைப்படம் எடுக்குமாறு தனது செல்பேசியை அவரிடம் கொடுக்க ஆனால் என்ரிக் லெகசியாஸ் அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார் இந்த சம்பவம் லாஸ் வேகாஸில் ஒரு சந்திப்பின்போது தனது ரசிகர்களை சந்தித்த போது நடந்து. 
இதை தொடர்ந்து இந்த வீடியோ பதிவிற்கு பல்வேறு வகையான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

 

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமல் விட்டதிலிருந்து 561,028 லைக்களை பெற்றுள்ளது.
இந்த வீடியோவிற்கு அவரது சில ரசிகர்கள் பொறாமையுடனும் கமெண்ட் செய்துள்ளனர்.
இவரது ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு பல்வேறு கருத்துக்களை கமெண்டில் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Continues below advertisement
Sponsored Links by Taboola