பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் இம்ரான் காஷ்மி. தற்போது டைபக் என்னும் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். பிரித்திவிராஜ் , பிரியா ஆனந்த் நடிப்பில் , ஜெயகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த EZRA என்னும் திகில் மலையாள படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. டைபக் படத்தை T-Series மற்றும் Panorama Studios இணைந்து தயாரித்து வருகின்றன. EZRA படத்தை இயக்கிய ஜே.கே ( ஜெயகிருஷ்ணன் ) இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகிறார். படத்தில் நிகிதா தத்தா , பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தர்ஷனா பங்கித் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இம்ரான் ஹாஷ்மி ராஜன் என்னும் கதாபாத்திரத்திலும் , நிகிதா தத்தா மஹி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். டைபக் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற அக்டோபர் 29 ஆம் தேதி டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.
ஜெய கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள டைபக் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஹாஷ்மி, படத்தின் இறுதி காட்சிகள் அதாவது கிளைமேக்ஸ் காட்சிகள் தனக்கு மிகவும் கடினமானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்ரான் ஹாஷ்மி தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரினா கைஃப் நடிக்கும் டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மியின் உடலில் சில மாற்றங்கள் தேவைப்படுவதால் , அதிக நேரத்தை உடற்பயிற்சி கூடங்களிலேயே கழித்து வருகிறாராம். முன்னதாக அமிதாபட்சன் மற்றும் இம்ரான் ஹாஷ்மி காம்போவில் வெளியான செஹ்ரே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முறையாக அமிதாப் , இம்ரான் கூட்டணியில் உருவான இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் அமேசான் பிரைமில் வெளியானது. படத்தில் சுசாந்த் சிங்கின் காதலி நேகா சக்கரபோர்த்தி நாயகியாக நடித்திருந்தார். மிஸ்ட்ரி - திரில்லர் வகையில் இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.