விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் காரை இளைஞர் ஒருவர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் கண்டாச்சிபுரம் தாலுக்கா அலுவலகம் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வட்டாட்சியரின் பொலிரோ கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டு போர்டிகோ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்தவர்கள் கார் தீ பற்றி எரிவதை கண்டு காரில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் வட்டாட்சியரின் வாகனம் தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்கின்ற இளைஞர் வட்டாட்சியர் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியை சுத்தியால் உடைத்து பின்னர் பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் வார்னிஷை கார் உள்ளே ஊற்றி தீ வைத்தது சிசிடிவி காட்சி பதிவுகளில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து வட்டாட்சியரின் காருக்கு தீ வைத்த ரஞ்சித்தை அரை மணி நேரத்தில் கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் ரஞ்சித்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கார்த்திகேயன் அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாகவும், அதற்காக தான் காரை கொளுத்தியாதவும் ஏற்கனவே இரு முறை வட்டாட்சியர் அலுவலக கண்ணாடிகளை தான் தான் உடைத்ததாகவும் ரஞ்சித் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் தாயார் தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனவும் அவனை அதற்கான சிகிச்சையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் போலீசார் இந்த தீ விபத்து தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டாச்சிபுரம் வட்டாட்சியரின் கார்த்தி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்