Continues below advertisement

'அய்யனார்', 'ஈரம்' திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆதி நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் நேற்று தொடங்கப்பட்டது. வெற்றிப்படமாக அமைந்த 'ஈரம்' பட கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.  

 

Continues below advertisement

 

2009ம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி, நந்தா துரைராஜ், சிந்து மேனன் ஆகியோரின் நடிப்பில் மிகவும் வித்தியாசமான ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படமாக வெற்றி பெற்ற படம் 'ஈரம்'.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்த கூட்டணி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'சப்தம்' எனும் திரைப்படம் மூலம் மீண்டும் இணைகிறது.  ஹீரோ, இயக்குனர் மட்டுமின்றி ஈரம் படத்தின் இசையமைப்பாளர் தமன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். 

 

 

இனிதே நடைபெற்ற படத்தின் பூஜை :

7ஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிவா, இயக்குனர் அறிவழகனின்  ஆல்பா பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'சப்தம்' திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்க உள்ளார் இயக்குனர் அறிவழகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரம் என்ற வெற்றி படத்தை கொடுத்த இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள 'சப்தம்' திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றின விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நிக்கி கல்ராணி - ஆதி திருமணம் :

தமிழ் சினிமாவில் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமான ஹீரோயின் நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த நிக்கி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் மிகவும் பிஸியாக இருந்தவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர் ஆதியை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார். பல திரை பிரபலங்களும் கலந்து கொண்ட இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமீபத்தில் நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி மிகவும் வைரலாக பரவியது. அது உண்மையல்ல வதந்தி என நிக்கி கல்ராணி மற்றும் ஆதி பிறகு தெளிவுபடுத்தினார்.