முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர், எட்டு மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக PA Media வியாழன் அன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெக்கரின் வழக்கில் நேரடியாகக் கருத்து தெரிவிக்க மறுத்த செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, "குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள்" என்று உள்துறை அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. 






ஜெர்மனியைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர், 2012ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வருகிறார். ஆனால் அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் பிரிட்டிஷ் குடிமகனாக கருதப்படமாட்டார்.  ஏப்ரலில்,  டென்னிஸ் ஜாம்பவான் பெக்கர் திவால் சட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு  நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி டெபோரா டெய்லரால் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் முதலில் சிறையில் பாதி தண்டனையை அனுபவிக்க வேண்டியிருந்தது.  மேலும் நீதிபதி டெய்லர் கூற்றில், ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போரிஸ் பெக்கர் சொத்துக்களை மறைத்தன் மூலம்  "மோசமான செயல்பாட்டால் அரசினை ஏமாற்றப் பார்க்கிறார்" என்று குற்றம் சாட்டினார். 2.5 மில்லியன் பவுண்டுகள் ($3.1 மில்லியன்) சொத்துக்கள் மற்றும் கடன்களை மறைத்து கடன்களை செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்டது.  டென்னிஸ் ஜாம்பவான் பெக்கர் முன்பு அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, அவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.






டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர் 1985ல் 17 வயதில் விம்பிள்டனை வென்றபோது டென்னிஸ் வரலாற்றை உருவாக்கினார், மேலும் அடுத்த 11 ஆண்டுகளில் மேலும் ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து டென்னிஸ் உலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். குறிப்பாக நோவக் ஜோகோவிச்சின் பயிற்சியாளராக மற்றும் வர்ணனையாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.