Continues below advertisement

தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தை கைப்பற்றியவர் நடிகை துஷாரா விஜயன். 'சார்பட்டா பரம்பரை' முதல் சமீபத்தில் வெளியான 'ராயன்' படம் வரை தன்னுடைய படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்தில் அவரின் தங்கை துர்காவாக அற்புதமான நடிப்பை வழங்கியமைக்காக ரசிகர்களால் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக த.சே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா விஜயன். 

 

Continues below advertisement

அக்டோபர் மாதம் 'வேட்டையன்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நவம்பர் மாதத்திற்கு தள்ளி போகலாம் என கூறப்படுகிறது. 

படத்தின் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒவ்வொருவராக டப்பிங் பணிகளை முடித்து வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் ஃபகத் பாசில் மற்றும் நடிகை அபிராமி டப்பிங் பணிகளை முடித்த நிலையில் தற்போது துஷாரா விஜயனும் 'வேட்டையன்' படத்துக்காக அவரின் டப்பிங் பணிகளை இன்று துவங்கினார். மேலும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  

 

துஷாரா விஜயன் திரையில் மட்டுமின்றி திரைக்கு பின்னாலும் தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக அதிகமாக ஹோம் ஒர்க் செய்ய கூடியவர். அதை நிரூபிக்கும் விதமாக 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னர் அவர் எந்த அளவுக்கு அதற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டு ஆர்வத்துடன் அவரின் கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார் என்பதை காட்டும் புகைப்படங்கள் சிலவற்றை 'வேட்டையன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இதை பார்த்த துஷாராவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. 

 

 

'வேட்டையன்' படத்தை தவிர நடிகர் விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' படத்தின் ஹீரோயினாகவும் துஷாரா விஜயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்த ஆண்டு துஷாரா விஜயனுக்கு நல்ல ஒரு ஆண்டாக வெற்றிகளை அடுத்தடுத்து குவிக்கும் ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.