தமிழில் முதல்முறையாக பாடகராக அறிமுகமாகவுள்ளார் பிரபல நடிகர் துல்கர் சல்மான். 2014-ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடிப் பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துல்கர் சல்மான் மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்பது அனைவரும் அறிந்ததுதான். மலையாள படங்களுக்கு நிகராக தமிழ் திரையுலகிலும் துல்கருக்கு விசிறிகள் அதிகம். குறிப்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கூட்டத்தை அதிகரிக்க உதவியது.
இந்த பாடலை பாடியது உங்கள் துல்கர்.. பிருந்தா இயக்கும் ஹே சினாமிக்காவில் டபுள் ட்ரீட்...
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 14 Apr 2021 08:30 PM (IST)
இயக்குநராக களமிறங்கியிருக்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கும் படத்தில், பாடராக அறிமுகமாகிறார் துல்கர் சல்மான்.

ஹே சினாமிக்கா படத்தில் துல்கர் சல்மான்
Published at: 14 Apr 2021 08:30 PM (IST)