சமீபத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த நடிகர் துல்கர் சல்மான், ஆர்.பால்கியின் சப் எனும் க்ரைம் படத்தில் நடித்துள்ளார்.


மலையாளம், தமிழ், தெலுங்கு என நடித்து வரும் துல்கர் “கர்வான்” என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகாலும் நடிப்பாலும் கன்னிப் பெண்களை கவர்ந்த துல்கர், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுப் என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட் உலகில்  களம் இறங்கியுள்ளார். சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி மற்றும் பூஜா பட் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.


நெகடிவ் விமர்சனங்கள் கொடுக்கும் திரை விமர்சனர்களை தேடி தேடி வெறிகொண்டு கொல்லும் ஒரு கொலையாளியின் வாழ்வை மையமாக கொண்டது இப்படத்தின் கதைகரு.


நேர்காணல் ஒன்றில், தென்னிந்தியாவின் சார்மிங் நாயகன் துல்கர், அவரை பற்றி வெளிவரும் விமர்சனங்களை பற்றி மனம் திறந்து பல விஷயங்கள் பேசினார். அதில், “ என்னை பற்றிய கேவலமான விமர்சனங்களை நான் கடந்து வந்துள்ளேன். நான் படம் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் படம் நடிப்பதற்கு நான் தகுதியற்றவன் என்றும் சிலர் எழுதிவருகின்றனர். இப்படிப்பட்ட விஷயங்களை கடந்து வருவது கஷ்டமான ஒன்று.” என்று கூறினார்.






மேலும் படத்தை பற்றி பேசிய இவர், “ வித்தியாசமான கதை கொண்ட பல படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால் இப்படத்தில் நான் நடிக்கவுள்ள கதாப்பத்திரமும், படத்தின் கதையும் தனித்துவமானது. ஆக, இது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தந்துள்ளது.” என்று பேசினார்.






துல்கர் நடித்த சீதா ராமம் எனும் காதல் காவியம், தியேட்டரில் பெற்ற வரவேற்பை விட, ஓடிடியில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. முன்னதாக சீதா ராமம் ரிலீஸ் குறித்து பேசிய துல்கர்,  “தென்னிந்திய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர் என்ற செய்தி மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தென்னிந்திய சினிமா படங்களை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.


இப்படத்தில், மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.