த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தை ஒரே சமயத்தில் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.


கடந்த 2013-ஆம் ஆண்டில்  மலையாள மொழியில் வெளிவந்த படம் த்ரிஷ்யம். ஜீது ஜோசப் இயக்கி மோகன்லால் மீனா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஒரு சாமானியன் எதிர்பாராத ஒரு நிகழ்வில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே த்ரிஷ்யம் படத்தின் கதை. மலையாளத்தின் இந்தப் படம் பெரும் வரவேற்பை  பெற்றதால் கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் ஆகியவர்கள் இந்தப் படத்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து இந்தியில் அஜய் தேவ்கன் கஜோல் நடிப்பில் வெளியானது த்ரிஷ்யம். அத்தனை மொழிகளிலும் இந்தப் படத்தை இயக்கியவர் ஜீது ஜோசப். ஒரே படத்தை இயக்கி கிட்டதட்ட ஐந்து மொழிகளில் இயக்குநராக உருவெடுத்தவர் ஜீது ஜோசப். கடந்த 2021-ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது


த்ரிஷ்யம் 3


தற்போது த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் குறித்தான பேச்சுவார்த்தை நிகழ்ந்து வந்த சூழலில் மூன்றாவது பாகத்துக்கான கதையை உருவாக்கியுள்ளார் அபிஷேக் பாதக். இந்தக் கதை இயக்குநர் ஜீது ஜோசப்புக்கு மிகவும் பிடித்துப்போக த்ரிஷ்யம் 3-ஆம் பாகத்தின் படப்பிடிப்பை ஒரே சமயத்தில் மலையாளத்திலும் ஹிந்தியிலும் படபிடித்து ஒரே நாளில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்கள் . மலையாளத்தில் மோகன்லால் மற்றும் ஹிந்தியில் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் இந்தப் படங்களில் நடிக்க இருக்கிறார்கள். அதே நேரத்தில் எல்லாம் முடிவான பின் தெலுங்கு பட தயாரிப்பாளர்களும் இவர்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


த்ரிஷ்யம் 3-ஆம் பாகத்துடன் இந்த படம் முடிவடையப் போவதாகவும் கூறப்படுகிறது.


இரண்டாம் பாகம் எப்போ வரும்?


ஒருபக்கம் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் மூன்றாவது பாகத்தை வெளியிட திட்டங்கள் நடந்துகொண்டிருக்க, தமிழில் இன்னும் த்ரிஷ்யம் இரண்டாம் பாகமே வெளிவரவில்லை என்கிற ஆதங்கம் ரசிகர்களுக்கு  இருக்கிறது. கமல்ஹாசன் நடித்த முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வெளிவராததன் காரணம் புரியாததாய் இருக்கிறது.


கொரிய மொழியில் வெளியாகும் த்ரிஷ்யம்


தற்போது  த்ரிஷ்யம் படத்தை கொரிய மொழியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பனோரமா திரைப்பட நிறுவனம் தென்கொரியத் திரைப்பட நிறுவனமான ஆந்தலாஜி ஸ்டுடியோஸுடன் இந்தப் படத்தை ரீமேக் செய்வதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ள தகவலை, சர்வதேச கான் திரைப்பட விழாவில்  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தனர்.