சன்டிவியில் ஒளிப்பரப்பான  ‘நாயகி’ தொடரில் கதாநாயகியாக நடித்த வித்யா பிரதீப், தமிழில்  ‘அவள் பெயர் தமிழரசி’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து  ‘சைவம்’,  ‘பசங்க 2’  ‘மாரி 2’  ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பயோடெக்னாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர், சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். முன்னதாக,  Stem Cell Biology துறையில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், சமீபத்தில் தான் டாக்டர் பட்டம் பெற்று அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.


 



விஞ்ஞானியான நடிகை வித்யா :


நமக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை மூலம் மிகவும் பிரபலமான ஒரு முகம் இன்று வெளிநாட்டில் விஞ்ஞானியாக இருப்பதன் மூலம் நமது இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். டாக்டர் வித்யா பிரதீப் இந்தியாவில் இல்லை என்றாலும் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது வித்யா இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஒரு அருமையான வீடியோ ஒன்றை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.


அதில் "என் நலம் குறித்து ஏராளமானோர் விசாரித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இங்கு மிகவும் நலமாக இருக்கிறேன். அமெரிக்காவில் பணிநிமித்தமாக வந்த சில மாதங்கள் சற்று சிரமமாகவே இருந்தது. சென்னையில் மிகவும் சொகுசாக இருந்துவிட்டேன்.


வேலை, சினிமா, விளம்பரம் என மிகவும் பிசியாக இருந்தேன். புது இடத்திற்கு வந்து தொடக்கம் முதல் என்னை மாற்றிக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாக ஆரம்பத்தில் இருந்தாலும் அதை வெற்றிகரமாக கையாண்டுவிட்டேன். இங்குள்ள உணவு, வானிலை சகப்பணியாளர்கள், டெக்னிக் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தற்போது முழுவதுமாக செட்டிலாகி விட்டேன். இங்கு இருப்பது நன்றாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் பலருடன் பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னால் புதிய மருத்துவ டெக்னிக் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கும் மேல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வேலையை செய்வதில் மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. 


 






 அறிவியலில் சந்தேகம்னா என்னை கேளுங்கள் :


வரும் நாட்களில் நான் என்னுடைய அனுபவம் குறித்தும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். என்னுடைய நண்பர்கள் பலரும் இங்கு விஞ்ஞானிகளாக பணிபுரிகிறார்கள். அவர்களுடைய அனுபவங்களையும் நான் உங்களுடன் என்னுடைய இன்ஸ்டாப்பாக்கம் மூலம் பகிர்கிறேன். இந்த தகவல்கள் சயின்ஸ் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ஏராளமானோர் என்னிடம் பயோ டெக்னாலஜி படிப்பில் பிஹெச்டி செய்வது குறித்தும் மற்றும் பல விஷயங்கள் குறித்தும் கேட்கிறார்கள். நம் இந்திய மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்ய முயற்சிசெய்வேன். நீங்கள் மிகவும் கடினமாக படித்து ஏராளமான விஷயங்களை தியாகம் செய்து படிப்பதால்,எதிர்காலத்தில் நிச்சயம் உங்களுக்கு அதற்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். இன்று சயின்ஸ் மற்றும் டெக்னலாஜி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. உங்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இன்றைய உலகம் முழுவதும் போட்டிகளால் நிரம்பியுள்ளன. இங்கு படித்து  பயிற்சி பெற்று அதை நாம் நாட்டிற்கு கொண்டு போய் செயல்படுத்தலாம். அதனால் உங்களுடைய கவனம் முழுவதையும் படிப்பின் மீது செலுத்துங்கள். 


ஆர்வம் முக்கியம் கோபாலு :


மேலும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றின் மீது ஆர்வம் இருக்கும். சயின்ஸ் மாணவர்கள் எப்படி அதில் கவனம் செலுத்த முடியும் என நினைக்காதீர்கள். உங்கள் ஆரவம் உறுதியாக இருந்தால் நீங்கள் நிச்சயம் அதை சாதிக்க முடியும். இன்னும் கொஞ்ச காலம் நான் சயின்ஸ் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவின் மூலம் உங்களுக்கு நான் சொல்ல நினைத்தது சென்று அடைந்திருக்கும்  என நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்" என மிகவும் ஊக்கமளிக்கும் விதத்தில் பேசியிருந்தார் டாக்டர் வித்யா பிரதீப்.