அமிதாப் பச்சன் , ஷாருக் கான் உள்ளிட்டவர்கள் நடித்த டான் படத்தின் மூன்றாம் பாகத்தில்  தற்போது பாலிவுட்டின் பிரபல  நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். ஒரு புது சகாப்தத்தின் தொடக்கமாக இந்தப் படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர்.


 


டான் என்கிற சகாப்தம்




தமிழில் எப்படி பில்லாவோ அதே போல் தான் இந்தியில் டான். இங்கு ரஜினிகாந்த் என்றால் அங்கு அமிதாப் பச்சன் நடித்தார். பாலிவுட்டில் வெளியான டான் கதாபாத்திரத்தை தமிழ் அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருப்பார் அமிதாப் பச்சன்.


அமிதாப் பச்சனைத் தொடர்ந்து டான் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்ற நடிகராக ஷாருக் கான் தேர்வு செய்ய்ப்பட்டார். அமிதாப் பச்சனின் குறை தெரியாத அளவிற்கு இந்தக் கதாபாத்திரத்தை தனது நடிப்பால் தனித்துவமான ஒரு படமாக மாற்றினார் ஷாருக்கான்.


இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு டான் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. தற்போது கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு டான் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த முறை ஷாருக் கான் இந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் புதிய நடிகர் ஒருவரை நடிக்கத் தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குநர் மற்றும் நடிகர் ஃபர்ஹான் அக்தர்.


டான் 3 யில் யார் நடிக்க போகிறார்






 


தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சின்ன முன்னோட்ட வீடியோவுடன் இந்தத் தகவலை வெளியிட்ட படத்தின் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் “தனது தனித்துவமான நடிப்பால் டான் படத்தை மெருகேற்றியிருப்பார் ஷாருக் கான். அவரை இயக்கும் வார்ய்ப்பு எனக்கு ஒன்றல்ல இரண்டு முறை வாய்த்தது.


இந்த முறை ஒரு புதிய நடிகரை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறோம் . நான் வெகு நாட்களாக பார்த்து வியந்து வரும் ஒரு நடிகர் இவர். அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கானுக்கு மக்களாகிய நீங்கள் கொடுத்த அதே ஆதரவை நீங்கள் இவருக்கும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு புது சகாபதத்தின் தொடக்கம் ‘ என்று அவர் பதிவிட்டுள்ளார்.


டானாக மாறும் கல்லி பாய்


இப்படி அவர் தெரிவித்திருந்த  நிலையில் யார் அந்த நடிகர் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தார்கள். பாலிவுட்டின் உற்சாகமான அதே நேத்தில் பன்முகத்தன்மை கொண்ட நடிகரான ரன்வீர் சிங்  தான் அந்த புதிய டான் என்பதை வெளியிட்டுள்ளது படக்குழு. அமிதாப் பச்சன் ஷாருக் கான் பேசிய டான் படத்தின் மிகப் பிரலமான வசனத்தை பேசியபடியே நமக்கு அறிமுகமாகிறார் ரன்வீர் சிங்!






கல்லி பாய் , ராம் லீலா, ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்த ரன்வீர் சிங் திரைப்படங்களில் காலம் காலமாக போற்றிவரப்பட்ட மிகைப்படுத்தப் பட்ட ஆண் அடையாளங்களை உடைத்து வரும் நடிகர்.


தற்போது மாஸான ஒரு கதாபாத்திரமான டான் கதாபாத்திரத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை நிகழ்த்தப் போகிறார் என்பதை தெரிந்துகொள்வதற்காக ரன்வீரை டானாக பார்க்க மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.