நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடில் புதிய குணசேகரனாக என்ட்ரி கொடுத்துள்ள எழுத்தாளரும் நடிகருமான வேல. ராமமூர்த்தி பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
வெளிப்படையான கிராமத்து மண் வாசனை கொண்ட வாட்டசாட்டமான ஒரு இரும்பு மனிதர் வேல ராமமூர்த்தி. தனது மண் சார்ந்த எழுத்துக்களால் ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் உள்ளிட்டவையை எழுதி கவனம் பெற்றவர். அவர் எழுதிய 'குற்றப்பரம்பரை' நாவல் விரைவில் வெப்சீரிஸாக வெளியாக உள்ளது. இந்த நாவலை வைத்து பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கு இடையில் பெரிய மோதலே நடந்துள்ளது!
வசன உச்சரிப்பு, உடல் மொழி, கம்பீரமான தோற்றம், கர்ஜனையான குரல் இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல இந்த அடையாளமான வசனங்களும் அவர்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான ஒற்றுமை எனலாம். இதுவரையில் வில்லனாகவே நாம் சினிமாவில் பார்த்து வந்த வேல ராமமூர்த்தி நடிக்கும் முதல் சீரியல் இதுதான். இதற்கு பிறகு அவர் வேறு சீரியல்களில் நடிப்பாரா என்பதும் கேள்விக்குறி தான். ஏன் என்றால் அவருக்கு சினிமாவில் நடிப்பதே பிரதானம் என கூறப்படுகிறது.
மாரிமுத்து ஒரு பென்ச்மார்க் செட் செய்துவிட்டார். அந்த இடத்தில் வேறு ஒருவரை பார்க்கும் போது அது வேறு மாதிரியாக தான் இருக்கிறது! ஒருவரை போலவே மற்றோருவரால் நடிக்க முடியாது என்றாலும் அவரவருக்கு என தனிச்சிறப்பு இருக்கும்.
வேல ராமமூர்த்திக்கு என தனி ஸ்டைல் உள்ளது. காலப்போக்கில் அவரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் ஒன்றி விடுவார். ஆனால் ரசிகர்கள் அவரை ஏற்று கொள்ள கொஞ்சம் கால அவகாசம் எடுத்து கொள்ளும். வேல ராமமூர்த்தி எந்த அளவிற்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பொருந்துகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.