அறிவை தீர்மானிப்பதில் சாதியும் பங்கும் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், அதற்கு சீமான் அளித்த பதிலை இங்கு பார்க்கலாம். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொஸைட்டி ஆப் இந்தியா சார்பில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில், ஆன்மீக வாழ்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஸ்ரீ ராமா கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு பேசினார்.




நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், அறிவு ஆரோக்கியம் எண்ணங்கள் ஆகியவற்றை பற்றி ஆன்மீகத்தில் என்னென்ன போதனைகள் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பற்றி பேசினார்.


தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், அறிவு என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று குறிப்பிட்டார். மேலும் அதை தீர்மானிக்கிறது எது என்பதை பேசும் போது நீ யாரு, நீ எங்க பிறந்த, நீ எந்த ஜாதி, எந்த மாதிரியான அனுபவங்களை பெற்றிருக்கிறாய் உள்ளிட்டவற்றை பொருத்தது என்று பேசினார்.


 


                     


அவரது இந்தப்பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதில் அழுத்த நாம் தமிழ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  “ இந்த மாதிரி சிந்தனை இருந்தால் எப்படி நிம்மதி இருக்கும். இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவரை எப்படி மனிதனாக கணக்கிட முடியும். சாதிக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ் கோட்பாடு.


மூளை உயர்சாதியா


உங்கள் மூளை உயர்சாதி என்றால் தயவுசெய்து அந்த மூளையை என்னிடம் கொடுங்கள் நான் எனது மண்டையை கழற்றி வைத்துக்கொள்கிறேன். நீங்க சொல்ற சாதியில் இல்லாதவர்கள் கூறிய வசனங்களை பேசித்தான் இன்று உச்சநட்சத்திரமாக இருக்கிறீர்கள். அதை மனதில் வைத்து பேசுங்கள்” என்று பேசினார்.


ரஜினியின் பேச்சு:


பாபா படத்தை பார்த்து நிறைய பேர் யோகதா சத்சங்கத்தில் இணைந்து இருக்கிறார்கள் என்று சங்கத்தை சேர்ந்தவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீராகவேந்திரா படம் வந்த பிறகும் தான் எல்லோருக்கும் ராகவேந்திரர் படம் பற்றி தெரிந்தது. நிறைய பேர் இமயமலைக்கும், பாபா குகைக்கும் செல்கிறார்கள். என் ரசிகர்கள் இருவர் சந்நியாசி ஆகிவிட்டார்கள். நான் இன்னும் நடிகனாக நின்று கொண்டிருக்கிறேன். 


பணம், புகழ், பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைத்தையும் பார்த்த எனக்கு வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் 10% கூட இல்லை . எல்லோருடைய மனமும் பின்னோக்கி அல்லது முன்னோக்கி மட்டுமே இருக்கிறது. ஒன்று பின்னோக்கி நமக்கு நடந்த தீமைகளை பற்றி யோசிக்கிறோம் அல்லது முன்னோக்கி இருக்கும் ஆபத்து பிரச்சனை பற்றி நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளை பாருங்கள்.அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி யோசிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 


உடல், அறிவு,மனம் இந்த மூன்றும் முக்கியம்.இதனை இணைப்பது உயிர். 60 வயசுக்கு மேல் நோய் வந்து வாரிசுகளுக்கு பாரமாக இருக்ககூடாது. நமக்கு நாமே பாரமாக இருக்ககூடாது. சந்தோஷமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே உயிர் போய்விட வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண