ரம்யா பாண்டியன்:
சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல், குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையலில் தன்னுடைய கை வண்ணத்தை காட்டி ஃபைனல் வரை வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்நிகழ்ச்சியில் 2ஆவது ரன்னர் அப்பாக இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலமாவது சினிமா வாய்ப்பு வரும் வாழ்க்கை மாறும் என்று எதிர்பார்த்த ரம்யா பாண்டியனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதையடுத்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தினார். அப்போதும் கூட சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜோக்கர், படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்த போதிலும் அதன் பிறகு நடித்த ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், போன்ற படங்கள் படு தோல்வியை தழுவியது. தற்போது இவரின் கைவசம் இடும்பன்காரி என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. மேலும் முகிலன், Accidental Farmer and Co என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4:
Kalakka Povadhu Yaaru Season 9 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத போட்டியாளராக உள்ளே வந்து, மிகவும் திறமையாக விளையாடி ஃபைனல் வரை வந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தும் இவரது படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படாமல் போனது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெரிய தொகையை சம்பளமாக வாங்கிய ரம்யா பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் அடிக்கடி குடும்பத்தோடு அவுட்டிங் மற்றும் ஆன்மீக சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
திருமணம்:
இந்நிலையில் தான் தற்போது யோகா மாஸ்டரான லவல் தவானை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியுள்ளார். இவர்களது திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை கரையில் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தான் ரம்யா பாண்டியனின் திருமணம் குறித்து, அவரது அம்மா துரை பாண்டியன் உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருக்கிறார். இது குறித்து கூறியிருப்பதாவது: நாங்கள் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வந்தோம். முதல் பெண் திரிபுர சுந்தரி இப்போது காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார்.
2ஆவது மகள் தான் ரம்யா பாண்டியன். 3ஆவது மகன், பரசுராம். இப்போது கேம் டிசைனராக இருக்கிறான். மாஸ்டர் பிளான், ஊழியன் ஆகிய சில படங்களை என்னுடைய கணவர் துரை பாண்டியன் இயக்கி உள்ளார். இந்த படங்கள் தோல்வியோடு நஷ்டம் ஏற்பட்டது. நாங்கள் திருநெல்வேலி பக்கமே போயிட்டோம்.
ரம்யா பாண்டியன் படிக்கும் போது ரொம்பவே புத்திச்சாலி. டிசிப்பிளினோடு நடந்து கொள்வாள். இதற்காக 3 மெடல்கள் கூட வாங்கியிருக்கிறாள்.
ரம்யா பாண்டியன் அப்பா மரணம்:
அந்த சமயத்தில் தான் ரம்யா பாண்டியன் அப்பா மரணம் நேர்ந்தது. வயலுக்கு சென்ற அவர் விஷ பூச்சு கடித்து உயிரிழந்தார். அப்பாவின் மறைவு ரம்யா பாண்டியனை அதீத பொறுப்பாளியாக மாற்றியது. அவர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும். அதனால் தான் ஒருவரை காதலிக்கிறேன் என ரம்யா கூறியதும், உடனே நாங்களும் ஒப்புக்கொண்டோம். யோகா கற்றுக் கொள்ள போன இடத்தில் தான் மாப்பிள்ளையை பார்த்து அவரின் பழக்க வழக்கங்கள் பிடித்து போய் காதலிக்க துவங்கியுள்ளார். அதை நேரடியாகவே மாப்பிள்ளையிடம் கூறியுள்ளார்.
முதலில் மறுப்பு தெரிவித்த மாப்பிள்ளை, அதன் பிறகு ரம்யா பாண்டியனின் குணங்களும் அவருக்கு பிடித்து போக ஓகே சொல்லியிருக்கிறார். குரு ஜி ரவிஷங்கர் ஓகே சொன்னால் தான் திருமணம் என்று கூறியுள்ளார். குருஜி முதலில் இதற்க்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. பிறகு ரம்யா பாண்டியன் அவரின் பிறந்தநாளில் குரு ஜியை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் பெற்றாராம். இதை தொடர்ந்தே ரம்யா பாண்டியன் மற்றும் லவல் தவான் திருமணம் நடந்துள்ளது.
மாமியாருக்கு புரபோஸ் & வரதச்சணை:
ரம்யா பாண்டியன் வீட்டில், திருமணத்திற்கு சம்மதம் வாங்கியது லவல் தவான் தானம். நட்பு ரீதியாக ஏற்கனவே ரம்யா பாண்டியன் வீட்டுக்கு வந்துள்ள இவர், அடுத்த முறை வந்த போது கையில் ஒரு தங்க மோதிரத்தை வைத்து கொண்டு முட்டி போட்டு உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து வைப்பீர்களா? என புரபோஸ் பண்ணுவது போல் கேட்டாராம். பின்னர் ரிஷிகேஷில் நடந்த திருமணத்தின் மொத்த செலவையும் மாப்பிள்ளை தான் செய்தார். நீங்கள் எதுவுமே செய்ய கூடாது என்பது அவர் உறுதியாக கூறி விட்டாராம்.
சென்னையில் நடந்த ரிசப்ஷன் மட்டும் ரம்யா பிடிவாதமாக இருந்து செலவு செய்ததாக அவரின் அம்மா கூறியுள்ளார். லவல் தவான் பஞ்சாபை சேர்த்தவர் என்பதால், அவர்களின் முறைப்படி ரம்யாவுக்கு வரதச்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டார்கள். லட்சங்களில் மதிப்புள்ள பெரிய ஹாரம் ஒன்றை மாப்பிள்ளையின் அப்பா கொடுத்தார் என தெரிவித்துள்ளார். ரம்யா மீது அவர்களின் குடும்பமே மிகவும் பாசமாக உள்ளனர். ரம்யா ஹனி மூன் என்றபோது கூட, ரம்யா செலவுக்கு என அவரின் மாமியார் குறிப்பிட்ட பணத்தை அவரின் அக்கௌண்டில் போட்டதாக பூரித்த மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளார் ரம்யா பாண்டியனின் அம்மா.