ஜிம்மில் நாம் செய்யும் வொர்க் அவுட் என்பது நாம் ஃபிட்டாக மாறுவதற்கு மிக குறைவான சதவீதமே உதவிசெய்கிறது. காரணம், நமது ஃபிட்னஸில் பெரும்பான்மையான பங்கு நாம் சாப்பிடும் உணவை சார்ந்தே இருக்கிறது. என்னதான் நீங்கள் மாங்கு மாங்கு உடற்பயிற்சி செய்தாலும், நாம் எதிர்பார்க்கும் உடலுக்கு தேவையான உணவை வழங்கவில்லை என்றால், நாம் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது என்பதே நிதர்சனம்.
ஃபிட்னஸ் ஆர்வலர்களை தாண்டி இதில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர்கள், சினிமா பிரபலங்கள். படத்திற்கு படம் தங்களை லுக்கையும், உடலமைப்பையும் மாற்றும் அவர்களுக்கு, எப்போதுமே டயட் சாப்பாடுதான். இதில் சில பிரபலங்கள், அவர்களின் ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள், தங்களது டயட் பற்றிய விவரங்கள் அல்லது தாங்கள் பயிற்சி அளிக்கும் பிரபலங்களின் டயட்டை பொதுவெளியில் பகிர்வது உண்டு.
அப்படி ஊட்டச்சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகை நடிகை ஒருவருக்கு பிடித்த உணவை பற்றி பகிர்ந்திருக்கிறார். அந்தப்பதிவில் புட் ரெசிபி ஒன்றை செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ள அவர், இந்த ரெசிபி பிரபல நடிகை ஒருவருக்கு பிடித்த ரெசிபி என்றும் அவர் யார் என்று தெரிந்து கொள்ள, தான் எழுதி வெளியிட்டிருக்கும் யுக்தஹார்: தி பெல்லி அண்ட் பிரைன் டயட் புத்தகத்தில் பகுதி 10 சென்று தெரிந்து கொள்ளலாம் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அந்தப்புத்தகத்தை பிரட்டி யார் அந்த செலிபிரட்டி என்று பார்த்தால், அது நயன்தாரா என்பது தெரிந்தது. இந்த Coconut Smoothie ரெசிபியானது நயன் தாராவுக்கு மிகவும் பிடிக்குமாம். காலை மற்றும் மாலை வேளைகளில் நயன்தாரா இதை குடிப்பதாக அந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.