நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ள குட்டி அம்சங்கள் அவற்றை மேலும் வெவ்வேறு பயன்பாடுகளுக்கு வழிவகுப்பவையாக இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதத்திலேயே குட்டி அம்சங்கள் அவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை நன்றாக கவனித்துப் பார்த்தால், அவற்றின் பயன்பாடுகள் நமக்குப் புரிய வரும். உதாரணமாக, எஸ்கலேட்டர்களில் ஏறும் போது, பக்கவாட்டில் இடம்பெற்றுள்ள நைலான் ப்ரஷ்கள் நமது ஷூவைத் துடைப்பதற்காக இருப்பவை அல்ல; அவற்றிற்கு மற்றொரு பாதுகாப்புப் பணி இருக்கிறது. 


இதனைப் போலவே, மேலும் பல்வேறு கவனிக்காத அம்சங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் இருக்கின்றன.. அவை என்ன என்பதை இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 


1. ஜீன்ஸ் பேண்ட்டின் ஓரத்தில் இடம்பெற்றுள்ள குட்டி பட்டன்



ரிவெட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த குட்டி பட்டன்கள் அழகுக்காக வைக்கப்படவில்லை. ஜீன்ஸ் பேண்டில் அதிக அழுத்தம் காரணமாகவும், நடமாட்டம் காரணமாகவும் கிழிந்து விடும் இடங்களிலும் இவை பாதுகாப்புக்காக சேர்க்கப்பட்டுள்ளன; இனிமே உங்களிடம் இருக்கும் ஜீன்ஸ் பேண்டில் உள்ள இந்த பட்டன்களைப் பார்க்கும் போது அதன் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரிய வரும். 


2.குல்லாவின் மீது இடம்பெற்றிருக்கும் சிறிய உருளை வடிவ நூல்கள்



பிரென்ச் கப்பற்படையினர் கப்பல்களின் மேல் தளத்தில் தலையை இடிக்காமல் இருப்பதற்காகவும், மேல் தளத்தை உணர்வதற்காகவும் இந்த வடிவமைப்பு குல்லாக்களில் இடம்பெற்றது. அடுத்து ராணுவத்தினர் இந்த வடிவமைப்பை பயன்படுத்த தொடங்க, தொடர்ச்சியாக இன்று காதுகளைப் போன்ற வடிவத்தில் க்யூட் அம்சமாக பார்க்கப்பட்டு இன்றும் இதே வடிவமைப்பு தொடர்கிறது. 


3. சமையல் பாத்திரங்களில் இடம்பெற்றிருக்கும் சிறிய துளைகள்



சமையல் பாத்திரங்களில் இடம்பெற்றிருக்கும் சிறிய துளைகளைப் பயன்படுத்தி நாம் அவற்றை ஆணியில் தொங்க விடுவோம். அவற்றை மற்றொரு விதமாக பயன்படுத்தும் விதத்தில், கைப்பிடிகளின் துளைகளில் கரண்டி, ஸ்பூன் முதலானவற்றை சமையலின் போது மாட்டிக் கொள்ளலாம். 


4. கம்ப்யூட்டர் கீபோர்டில் F, J ஆகிய எழுத்துகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள சிறிய மேடுகள்



கீபோர்டைப் பார்க்கமலே மிக வேகமாகவும், எளிதாகவும் டைப் செய்ய முடிவது எப்படி என்பதை சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் கீபோர்டில் F,J ஆகிய எழுத்துகளின் கீழ் இடம்பெற்றுள்ள சிறிய மேடுகள் தான். இதனை உங்கள் விரல்கள் மற்ற எழுத்துகளைத் தங்கள் மூளையால் நினைவுப்படுத்திக் கொள்ள உதவுகின்றன. 


5. எஸ்கலேட்டர் ஓரத்தில் இடம்பெற்றுள்ள ப்ரஷ்கள்



எஸ்கலேட்டர்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் இந்த ப்ரஷ்களைப் பயன்படுத்தி உங்கள் ஷூக்களை சுத்தம் செய்திருக்கலாம்; எனினும் இவை பெரியளவில் பாதுகாப்பு அம்சமாகப் பயன்படுகின்றன. எஸ்கலேட்டர் விபத்துகளில் பெரும்பாலானவை மக்களின் உடைகள், பைகள் முதலானவை பக்கவாட்டில் சிக்கிக் கொள்வதால் ஏற்படுகின்றன. இந்த சிறிய ப்ரஷ்கள் நம்மை அதனைப் பார்க்க செய்து, எஸ்கலேட்டரின் ஓரத்தில் கால்களை வைப்பதைத் தடுக்கிறது.