சென்னை எக்ஸ்பிரஸ்
ஷாருக்கான் தீபிகா படூகோன் நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். ரோஹித் ஷெட்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தமிழ் பெண்ணுக்கும் இந்தி பையனுக்கும் இடையிலான ஒரு காதல் கதையாக சென்னை எக்ஸ்பிரஸ் படம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்தப் படத்தில் மீனலோச்சனி அழகுசுந்தரம் என்கிற தமிழ் பெண்ணாக தீபிகா நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். இந்தப் படத்துக்கு பின் தீபிகா படுகோனுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
இந்த பாராட்டுக்களை எல்லாம் கத்ரீனா கைஃப் தான் நிராகரித்திருக்கிறார். மீனம்மா கதாபாத்திரத்தில் முதலில் கத்ரீனா கைஃபையே ரோஹித் ஷெட்டி கேட்டதாகவும், ஆனால் தனக்கும் இந்தக் கதாபாத்திரம் ஏற்றதாக இல்லை என்றும் கூறி அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கத்ரீனா நிராகரித்தப் படங்கள்
இதேபோல் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்த பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை கத்ரீனா கஃப் மறுத்துள்ளார். சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கிய பாஜி ராவ் மஸ்தானி, ஏ ஜவானி ஹே தீவானி, பர்ஃபி உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரிடம் வந்தும் அவற்றை நிராகரித்துள்ளார் கத்ரீனா கைஃப்.
டைகர் 3
மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில் தற்போது கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது டைகர் 3 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக் இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் களத்தில் கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கத்ரீனா கைஃபை ஒரு ஆக்ஷன் படத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் , துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு சண்டைப் போடும் காட்சிகள் என டைகர் 3 படத்தின் ட்ரெய்லரில் மாஸ் காட்டியிருக்கிறார் கத்ரீனா. இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஆர்வமாக இந்தப் படத்தை திரையில் காணக் காத்திருக்கிறார்கள்.