Crime: அரியானாவில் பள்ளி முதல்வர் மாணவிகள் 60  பேரை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. 


60 மாணவிகளிடம் அத்துமீறிய முதல்வர்:


ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி  ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 60 மாணவிகளை செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், பிரதமர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஐந்து பக்க கடிதம் அனுப்பி உள்ளனர்.


இந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் பற்றி மாநில மகளிர் ஆணையத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்தனர். பின்னர், அடுத்த  நாளான செப்டம்பர் 14ஆம் தேதி மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்ட செய்தது. இதன்பின், போலீசார்  பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின்பேரில் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  பின்னர், அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். 


60 புகார்கள்:


இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறுகையில், "பள்ளி முதல்வருக்கு எதிராக மாணவிகளிடம் இருந்து 60 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 50 புகார்களில் உடல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 10 மாணவிகள் இதுபற்றி எங்களுக்கு தெரியும்"  என்று குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், முதல்வர் அடிக்கடி அவரது அலுவலகத்திற்கு அழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தில் பள்ளி முதல்வருக்கு ஆதரவாக ஆசிரியை ஒருவரின் பங்கு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் சிலர் மாணவிகளை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.  60 பள்ளி மாணவிகளை மிரட்டி, பள்ளி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் படிக்க


Zika Virus: கேரளாவை துரத்தும் வைரஸ்.. 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு.. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தல்..


Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்?c