New Movie Release on Diwali 2023: 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு பட்டாசாக மொத்தம் ஐந்து படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தப் படங்களின் லிஸ்ட் இதோ!


ஜப்பான்



ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ஜப்பான். அனு இமானுவேல், விஜய் மில்டன், கே. எஸ்.ரவிகுமார், சுனில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.


ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் 25ஆவது படம் ஜப்பான். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜப்பான் என்கிற புகழ்பெற்ற திருடன் ஒருவன் எப்படி அரசியல்வாதிகளின் லாபத்துக்காக ஒரு கொலை செய்ததாக பழி சுமத்தப்படுகிறான். அதில் இருந்து தன்னுடைய சாமர்த்தியத்தால் எப்படி ஜப்பான் வெளியே வருகிறான் என்பதே இந்தப் படத்தின் கதை. வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி ஜப்பான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.


ஜிகர்தண்டா 2x



கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன், மலையாள நடிகர் ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


டைகர் 3



மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்  நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 . கத்ரீனா கைஃப், இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது டைகர் 3.


தி மார்வெல்ஸ் 



கேப்டன் மார்வெல் சீரிஸில் வெளியாகும் மற்றொரு படம் தி மார்வெல்ஸ். பரை லார்ஸன், தேயோனா பாரிஸ், இமான் வெலானி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நியா தாகோஸ்டா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.  நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வெவேறு உலகங்களில் இருக்கும் கேப்டம் மார்வெல் தங்களது சக்திகளை பயன்படுத்தும்போது ஒருவர் மற்றொருவரின் உலகத்திற்குள் கடத்தப்படுகிறார்கள். இந்தப் புதிய பிரச்னையை எதிர்கொண்டு வில்லன்களை அழிக்கும் மூன்று பெண்களின் கதையே இந்தப் படம்.


ரைட்


விக்ரம் பிரபு  நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரைட். கன்னடத்தில் ஷிவராஜ் குமார் நடித்து வெளியான டகாரு படத்தின் தமிழ் ரீமேக் ரைட். ஸ்ரீதிவ்யா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்தி இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் எழுத்தாளர் முத்தையா இந்தப் படத்திற்கு  வசனங்கள் எழுதியுள்ளார். நவம்பர் 12 ஆம் தேதி ரைட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.


ALSO READ | Diwali 2023 TV Movies: களைகட்ட போகும் தீபாவளி.. டிவியை தெறிக்க விடப்போகும் புதிய படங்கள்.. முழு விபரம் இதோ..!