பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்ய பாரதி தற்போது தெலுங்கில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது இயக்குநர் நரேஷ் குப்பிலி அநாகரீகமான வார்த்தையால் தன்னை குறிப்பிட்டதால் அவர் படத்தில் இருந்து நிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் திவ்யபாரதியை மறைமுகமாக தாக்கி நரேஷ் பதிவிட்டிருந்த நிலையில் திவ்யபாரதி அவருக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்
கோட் இயக்குநருடன் திவ்யபாரதி மோதல்
ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்களிடமும் பிரபலமானார். ஜிவி பிரகாஷ் உடன் திவ்ய பாரதி காதல் உறவி இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ததற்கும் திவ்யபாரதி தான் காரணம் என கூறப்பட்டது ஆனால் இந்த தகவல்களை ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் மறுத்தனர். இருவருக்கும் இடையிலான உறவு என்பது வெறும் தொழில் நிமித்தமானது மட்டும்தான் என கூறியிருந்தார்கள்.
தற்போது தெலுங்கில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி . நரேஷ் குப்பிலி இந்த படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பின் போது இயக்குநருடன் திவ்யபாரதிக்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் இந்த படத்தில் இருந்து நரேஷ் நீக்கப்பட்டார். படத்தின் தயாரிப்பாளரே இந்த படத்தை இயக்க முன்வந்தார்.
அநாகரீகமான வார்த்தையால் அழைத்த இயக்குநர்
படத்தில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நரேஷ் குப்பிலி தனது சமூக வலைதளத்தில் திவ்யபாரதி குறித்தும் கோட் படம் குறித்து மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதற்கு திவ்யபாரதி நரேஷ் குப்பிலிக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார். " பெண்களை "சிலகா" அல்லது வேறு எந்த வார்த்தையாலும் அழைப்பது தீங்கற்ற நகைச்சுவை அல்ல, அது ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பாகும். இது ஒரு முறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல; இந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் அதே முறையைப் பின்பற்றினார், பெண்களை மீண்டும் மீண்டும் அவமதித்தார், இதை எல்லாம் பார்த்தும் படத்தின் ஹீரோ அமைதியாக இருந்தார். இந்தக் கலாச்சாரம் இன்னும் ஒரு நாள் நிலைத்திருக்க அனுமதித்ததுதான் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. பெண்கள் கேலிக்கு ஆளாகாத பணியிடங்களை நான் தேர்வு செய்கிறேன், ஒவ்வொரு குரலும் முக்கியம், மரியாதை பேரம் பேச முடியாத இடங்களை நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல; ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் இது எனது தரநிலை!" என திவ்யபாரதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்