தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இளையராஜாவை கடத்த சதி:
அதாவது கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி பாட்டி பேசுவதை சாமுண்டீஸ்வரி கேட்டுவிட்டு வீட்டுக்கு வர, சந்திரகலா நான் சொன்னபடியே நடந்துச்சு பாத்தியா என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி நீ சொன்னா மாதிரி எதுவும் நடக்கல நீயும் என் பேரன் மாதிரி தான் என்று தான் பரமேஸ்வரி சொன்னாங்க என்று கோபப்படுகிறாள்.
பிறகு சந்திரகலா மற்றும் சிவனாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து பரமேஸ்வரி பாட்டியின் பேரன் என சொல்லிக் கொண்டு திரியும் இளையராஜாவை கடத்த திட்டமிடுகின்றனர். இளையராஜா வெளியில் போக முடியாமல் இருக்க ஒரு வேன் வந்து அவனை கடத்துகிறது.
கடத்தியது யாரை?
மறுபக்கம் கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி பாட்டி என இருவரும் இப்படி பேசிக் கொண்டதற்கு காரணம் ரேவதி தான் எனவும் சந்திர கலாவின் திட்டத்தை அறிந்து அவள் கார்த்திக்கு அதை தெரியப்படுத்தியது தெரிய வருகிறது.
இங்கே இளையராஜாவை கடத்திய பிறகு சந்திரகலாவுக்கு போன் போட்டு நீங்க சொன்ன வரை கடத்தி ஆச்சு என்று ரவுடிகள் சொல்ல, சந்திரகலா சிவனாண்டிக்கு ஃபோன் போட்டு யாரோ யாரையோ கடத்தி இருக்காங்க.. ஆனா யாரை கடத்தினாங்கனு தெரியல என்று குழப்பம் அடைகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.